பழனியில் காவல்துறையால் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை சேதப்படுத்திய இளைஞர்கள் கைது.
அதிரடி காட்டும் பழனி டிஎஸ்பி தனஞ்செயன்.
பழனியில் பல்வேறு முக்கியப் பகுதிகளில் குற்ற நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் உத்தரவின்படி பழனி டிஎஸ்பி தனஞ்செயன் அவர்களால் பழனி நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட அதிநவீன கேமராக்கள் காவல்துறையினர் அமைத்து குற்ற சம்பவங்கள் நடக்காமல் கண்காணித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனி அடிவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திலகர் வீதி பூங்கா அருகில் காவல்துறை மூலம் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
சேதப்படுத்திய நபர்களை பழனி டிஎஸ்பி தனஞ்செயன் அவர்களின் உத்தரவில், அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா அவர்களின் அறிவுரையின்படி அடிவாரம் சார்பு ஆய்வாளர் பிரதாப் தலைமையிலான அடிவாரம் காவல் துறையினர் விஜயகுமார் சிவப்பிரகாஷ் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் தப்பி செல்ல முயற்சித்த இளைஞர்களை மடக்கிப் பிடித்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
குற்ற வழக்கில் ஈடுபட்ட நபர்கள்
அடிவாரம் அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்த அஜய்,துர்கை ராஜன்
நாகேந்திர பிரசாத் ஆகியோர்கள்.