விராலிமலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை! ஆசிரியர் போக்ஸோவில் கைது!!

by ஆசிரியர்
Reading Mode

பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாருதி நகரைச் சேர்ந்தவர் எஸ்.வில்லியம் பால்ராஜ்(வயது52). இவர்,புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் முதுநிலை கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

இப்பள்ளியில் கல்வி பயின்று வரும் 16 வயதுள்ள 12ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த ஓராண்​டாக பாலியல் தொல்லை கொடுத்துள்​ளார்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.   மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் முதல்கட்ட வவிசாரணை செய்து அதன்பிறகு, கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். AWPS காவல் நிலைய ஆய்வாளர்   லதா   விசாரணை மேற்கொண்டு, ஆசிரியர் வில்லியம் பால்ராஜ் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து,அவரை கைது செய்தனர்.பின்னர், புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மாண்புடைய மாணவர்களை உருவாக்க வேண்டிய ஆசிரியர்களே மானங்கெட்டு,தரம் கெட்ட செயல்களில் ஈடுபடும் இவர்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு போக்ஸோவில் தண்டனை கொடுத்தால் மட்டும் போதாது.நிரந்தர பணி நீக்கமும் செய்ய  வேண்டும்  என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாகவும் உள்ளது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00