திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், அதிவேகமாகவும் இரு சக்கர வாகனங்களை இயக்கிய 3 நபர்கள் காவல்துறை வாகனத்தை கண்டதும் அதிவேகமாக கடக்க முயன்றபோது கொள்ளிடம் காவல்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப. நேரில் அழைத்து அதிவேகமாக செல்வதால் ஏற்படும் சாலை விபத்துக்கள் மற்றும் இழப்புகள் குறித்து எடுத்துரைத்து இதுபோல், மீண்டும் வேறு எங்கும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுரை வழங்கி உள்ளார்கள்.