பழங்குடியின மக்களின் தேவைக்கு வனத்துறையின் வாகன வசதி !!?
களியல் வனச்சரகத்தின் அசத்தல் ஏற்பாடு !
யானை நடமாட்டம் அச்சத்தில் இருக்கும் பழங்குடியின மக்களின் தேவைக்கு வனத்துறையின் வாகன வசதி
கன்னியாகுமரி மாவட்டம், களியல் வனச்சரகத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் சில நாட்களுக்கு முன்பு காட்டுயானைகள் முகாமிட்டன.
இதனால் பீதியடைந்த மக்கள் யானையை விரட்ட முயன்றதில் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
யானைகள் இருக்கும் தகவல் அறிந்த உடனே, நிகழ்விடத்தில் வந்த களியல் வனச்சரக ஊழியர்கள், ஊர் மக்கள் உதவியுடன் பெரும் சிரமமடைந்து போராடி முகாமிட்ட யானைகளை விரட்டினர்.
எனினும், மலைக் கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு காட்டு யானைகள் மீதான அச்சம் தீரவில்லை.
தங்களது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ வசதிகளுக்காக எந்த பகுதிகளுக்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
மக்களின் அச்சத்தை போக்கும் விதமாகவும், அவர்களின் தேவையை நிவர்த்தி செய்யும் விதமாகவும் களியல் வனச்சரகம் சார்பில்
வனத்துறையின் வாகனத்தை மலைக்கிராம மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
களியல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல விரும்பும் காணி மக்கள் அந்த வாகனத்தில் ஏறியதும், வனத் துறையினர் அவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று பின்னர் அவர்களை அங்கிருந்து திரும்ப கிராமத்துக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.
மலைக்கிராம மக்களுக்கு முழுவதுமாக யானை குறித்த அச்சம் போகும் வரை இந்த நடை முறை அமலில் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பழங்குடி மக்களும் வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.