உடல் பலம் மனோபலம் பெற வேண்டுமா ! ஆஞ்சநேயரின் இந்த மந்திரம் சொல்லிப் பாருங்கள் !! ஆச்சரியம் நிகழும் !!!?
சிலர் எதற்கெடுத்தாலும் உடனே அழுபவர்களாக,பயப்படுவர்களாக இருப்பார்கள்.மனோபலம் இன்மையே இதற்குக் காரணம்.கீழே சொல்லியுள்ள பிரயோகத்தின் மூலம் அவர்களை மனோபலம் கொண்டவர்களாக மாற்ற முடியும்.
வளர்பிறை செவ்வாய்க்கிழமை ஹனுமான் ஆலயம் சென்று அங்குள்ள ஆஞ்சநேயருக்குக் கொய்யாப்பழம் ,அச்சுவெல்லம், பழங்கள் படைத்து ஹனுமனை வழிபட்டு அர்ச்சகரிடம் ஹனுமனின் மேனியில் பூசிய செந்தூரம் கொஞ்சம் தருமாறு வேண்டி வாங்கி அதைக் கையில் வைத்துக் கீழே உள்ள மந்திரம் ஜெபித்து நெற்றியில் பூசி வர
உடலில் மனதில் பலம் பெருகி எந்த ஒரு சூழ்நிலையையும் தைரியமாக எதிர் கொள்ளும் மனோநிலையை அடையப் பெறுவார்கள்.
மந்திரம் :-
” ஓம் ஹம் ஹனுமந்தாய வீரரூபாய நமஹ “
மேற்குறிப்பிட்டுள்ள மந்திரத்தை மிகத் தூய்மையாக இருந்து தொடர்ந்து சொல்லி வர எப்பேற்பட்ட பில்லி, சூனியம், காத்து, கருப்பு, ஓமல் மற்றும் துஷ்ட சக்திகளின் தீய விளைவுகளும் நீங்கி சுபிட்சம் பெறுவது திண்ணம்.