குடிகாரனின் கும்மலாட்டம் ! மானாமதுரை மருத்துவமனை மது அருந்தும் பாராக மாறிய அவலம் !!?
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ராமசாமி என்ற நோயாளி இரவு 12 மணிக்கு மேல் அவருடன் வந்தவர் கொடுத்த மதுவை வார்டில் இருந்தபடியே அருந்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .
பணியில் இருந்த மருத்துவர் இதனை அறிந்ததும் மது அருந்திய ராமசாமியையும் அவருடன் வந்தவரையும் எச்சரித்தார் இதற்கு அந்த நபர் தனக்கு முழுமையான சிகிச்சை அளிக்காமல் வெளியே அனுப்புவதாக ஆட்சேபனை தெரிவித்தார்.
இதை அடுத்து ராமசாமி மீண்டும் வார்டில் அனுமதிக்கப்பட்டார் ,எனினும் சிறிது நேரத்திலேயே அந்த நபர் பெண்கள் வார்டுக்கு அருகில் மதுப்பாட்டில் மற்றும் மிக்ஸருடன் மீண்டும் மது அருந்தத் தொடங்கினர்.
இந்த தகவல் அறிந்து அங்கு வந்த மானாமதுரை காவல்துறையினர் மது பாட்டில் மற்றும் மிக்சருடன் இருந்த ராமசாமியை பிடித்து வழக்கு பதிவு செய்வோம் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர் .
இந்த சம்பவத்தால் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும், பணியாற்றிய ஊழியர்களும், மருத்துவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.