ஆளில்லா ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்தது தமிழக அரசு !?
தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான மின் நுகர்வோர்களின் வீடுகளிலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட, ஆளில்லா ஸ்மார்ட் மீட்டர் திட்டம்.முற்றிலும் கைவிடப்படுவதாக தகவல்.
தமிழகத்தில் வீடுகளுக்கு நேரில் செல்லாமல், தானியங்கி முறையில் மின் நுகர்வைக் கணக்கிடுவதற்காக கொண்டு வரப்பட்ட ரூபாய் 20,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் (Smart Meter) திட்டத்தை முழுமையாக கைவிட தமிழக அரசு தற்போது முடிவு செய்துள்ளது.
மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து கணக்கெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.மீட்டரில் உள்ள மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு வசதி மூலம் மின் பயன்பாடு தானாகவே கணக்கிடப்படும். கணக்கெடுக்கப்பட்ட மின் கட்டண விவரம் நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு நேரடியாக குறுஞ்செய்தியாக அனுப்பபடும்.
மின் ஊழியர்கள் நேரில் வராததால் ஏற்படும் தவறான கணக்கீடுகள் மற்றும் நுகர்வோர் பாதிப்புகள் இதன் மூலம் தவிர்க்கப்படும். தமிழ்நாட்டில் மொத்தம் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்காக 2025 மார்ச் மாதத்தில் உலகளாவிய டெண்டர் கோரப்பட்டது.
இதில் சுமார் 50 நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால், தற்போது இந்த டெண்டர்களை திறக்காமலேயே ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டால் எதிர்காலத்தில் இலவச மின்சாரச் சலுகைகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் விவசாய சங்கங்களும், நுகர்வோர் அமைப்புகளும் இத்திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது