பெண் எம்.எல்.ஏ.வுக்கு முத்தம் கொடுக்க முயன்ற காங்கிரஸ் பிரமுகர் மீது காவல் நிலையத்தில் புகார்!??

by ஆசிரியர்
Reading Mode

பெண் எம்.எல்.ஏ.வுக்கு முத்தம் கொடுக்க முயன்ற விவகாரம்: காங்கிரஸ் பிரமுகர் மீது போலீசில் புகார்?

கேரளம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் கட்சி மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் இந்திரா பவனுக்கு எம்.எல்.ஏ.க்கள் வர தொடங்கினார். அவர்களை காங்கிரஸ் முக்கிய பிரமுகர் செரியான் பிலிப் பிரதான வாயிலில் நின்றபடி வரவேற்று கொண்டு இருந்தார்.

அப்போது காங்கிரஸ் சார்பில் கொல்லம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா வந்தார்.

அவரை பார்த்ததும் வாயிலில் நின்று கொண்டிருந்த செரியான் பிலிப், பெண் எம்.எல்.ஏ.வை பாய்ந்து கட்டி பிடித்து வரவேற்பது போல் முத்தம் கொடுக்க முயன்றார்.இதனால் அதிர்ச்சி அடைந்த பிந்து கிருஷ்ணா, அவரது கையை தட்டி விட்டு அங்கிருந்து செல்ல முயன்றார்.ஆனால் செரியான் பிலிப் விடாமல் அவரை மீண்டும் கட்டி பிடிக்க முயன்றார்.

இந்த காட்சியை சிலர் செல்போனில் பதிவு செய்தனர். இந்தகாட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து செரியான் பிலிப்பின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் பெண்மையை களங்கப்படுத்தியதாக கூறி கேரள காங்கிரஸ் (மாணி) கட்சியை சேர்ந்த ஹபீஸ் என்பவர் செரியான் பிலிப் மீது மியூசியம் போலீசில் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00