மகா சிவராத்திரி 2026.
விரதம் வேண்டாம் கண் விழிக்க வேண்டாம்.52 நிமிட வழிபாடு போதும் சிவ அருள் பெற.
மகா சிவராத்திரி அன்று விரதம் இருக்க முடியாதவர்கள் இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் கூட இந்த 52 நிமிட வழிபாடு மட்டும் செய்தால் சிவனின் முழு அருள் கிடைக்கும் தலைவிதி மாறும்.
மகா சிவராத்திரியின் போது ‘நிசித காலம்’ எனப்படும் சிவபெருமான் ஜோதி வடிவான லிங்கோத்பவராக காட்சி அளித்த மிகவும் சக்திவாய்ந்த பிரபஞ்சத்தின் கதவுகள் திறந்திருக்கும் நேரத்தில் நாம் வேண்டியது நடக்கும்.
2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு (அதாவது பிப்ரவரி 16 அதிகாலை) 12:09 AM முதல் 01:01 AM வரை உள்ள 52 நிமிடங்கள்.
எளிய வழிபாட்டு முறை:
சரியாக 12 மணிக்கு வீட்டில் ஒரு தீபம் ஏற்ற வேண்டும்.வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி தியானம் செய்ய வேண்டும்.12:09 மணி முதல் 01:01 மணி வரை “ஓம் நமசிவாய” மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும்.முடிந்தால் சிவலிங்கத்திற்கோ அல்லது படத்திற்கோ வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம் கோடி புண்ணியம் தரும்.
இந்த 52 நிமிடங்களில் செய்யப்படும் தியானம் மற்றும் வேண்டுதல்கள் நேரடியாக ஈசனை சென்றடையும்.
வாழ்நாளில் நாம் அறியாமல் செய்த பாவங்களை கூட நீங்கி வாழ்வில் வளம் பெறக்கூடிய சக்தி இந்த 52 நிமிடங்களுக்கு உண்டு.
அதனால் நாமும் வழிபாட்டை செய்து சிவபெருமானின் அருளை பெற்று வாழ்வில் வளம் பெறுவோமாக.