சந்திர கிரகணமும்! பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்களும்!!

by ஆசிரியர்
Reading Mode

பூர்ண சந்திர கிரகணமும்! பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்களும்!!

விசுவாவசு வருஷம், ஆவணி மாதம் 22-ஆம் தேதி (07.09.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணி முதல் நள்ளிரவு 1.26 மணி வரை சதயம்,பூரட்டாதி நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இந்திய நேரப்படி இரவு 9.56 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம்

ஆரம்பம் இரவு 10.59 மணியளவில் தொடங்குகிறது.

கிரகண மத்யம நேரம் இரவு 11.41 மணியாகும்

முழு சந்திர கிரகணமும் நள்ளிரவு 12.23-க்கும்,

கிரகணம் முழுவதுமாக நள்ளிரவு 1.26 மணிக்கு நிறைவடைகிறது.

பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய நட்சத்திரங்கள்:-

அவிட்டம்,சதயம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி.

இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் கிரகண தோஷமுள்ளவர்கள் பரிகாரம் சாந்தி செய்துகொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று பகல் 12 மணிக்குள் போஜனம் செய்து கொள்ளவும் அதன் பின் கிரகணம் முடிந்தபின் புதிதாக சமைத்த உணவை உட்கொள்ளலாம் .

பொர்ணமி ச்ராத்தம் மறுநாள்
திங்கட்கிழமை (08-09-2025) செய்யவேண்டும்

தர்ப்பணம் பண்ண வேண்டிய நேரம்.11:41க்கு மேல்.1:26க்குள்.

க்ரஹணம் பிடிக்கும் போதும் விட்ட பிறகும் ஸ்நானம் செய்ய வேண்டும்.
க்ரஹண தோஷம் உள்ளவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை பனை ஓலையில் எழுதி க்ரஹண நேரத்தில் தனது உடலில் படுமாறு கட்டி கொண்டு முடிந்தவரை 3 முறை ஜபம் செய்யவும் .

“இந்தரோ நலோ தண்டதரஸ்ச வாயு குபேர ஈஷா:மஜ்ஜந்ம ரிக்ஷே மம ராசி ஸம்ஸதே ஸோமொபராகம் ஸமயந்து ஸர்வே||”

க்ரஹணம் முடிந்த பிறகு முறையாக ஸ்னானம் செய்துவிட்டு, இந்த (ஓலையை) சிறிது பச்சரிசியுடன் சேர்த்து சிறிய தக்ஷிணையுடன்

மம ஜன்மரிக்ஷே சந்த்ர உபராக ப்ரயுக்த தோஷ பரிஹாரார்த்தம் இதம் ஹிரண்யம் தண்டுல தான்யம் ச ஸம்ப்ரததே

என்று சொல்லி யாராவது ஒருவருக்கு தானம் செய்துவிட வேண்டும்.

குழந்தைகளின் நக்ஷத்ரத்தில் க்ரஹணம் பிடித்தால் ( 16 வயதிற்குள் இருந்தால்) அவர்களுக்காக தாயார் அல்லது தந்தை இந்த பரிஹாரத்தைச் செய்யலாம்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00