47
Reading Mode
வள்ளல் பெருமான் அருளிய 42 வகை பாவங்கள்…
- நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
- வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
- தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
- கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
- மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
- குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
- ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
- தருமம் பாராது தண்டிப்பது.
- ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
- உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.
- களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
- பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
- ஆசை காட்டி மோசம் செய்வது.
- போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
- வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.
- பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
- இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.
- கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
- நட்டாற்றில் கை நழுவுவது.
- கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.
- கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
- காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
- கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
- கருவைக் கலைப்பது.
- குருவை வணங்கக் கூசி நிற்பது.
- குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
- கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
- பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
- கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
- ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.
- கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
- அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
- குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
- வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
- பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
- பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.
- ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
- சிவனடியாரைச் சீறி வைவது.
- தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
- சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.
- தந்தை தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.
- தெய்வத்தை இகழ்ந்து செருக்கூறுவது.
வள்ளல் பெருமான் அருளிய மேற்குறிப்பிட்ட 42 வகை பாவங்களை நாம் செய்யாமல் இருந்து நல்லவகளை செய்து, நல்லவைகளை நினைத்து வாழ்வில் வெற்றி பெறுவோமாக!!
Customize Text:
Font Color: