தேவையான பொருட்கள்:-
முந்திரிபருப்பு _15.
திராட்ச்சை _15.
தேங்காய் துருவல் _1 கப்.
வெல்லம் பொடித்தது _1 கப்.
தண்ணீர் _3 கப்.
நெய் _1/2 கப்.
ஏலக்காய் தூள் _1/2 ஸ்பூன்.
ரவை _1 கப்.
செய்முறை:-
ஒரு பேனில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முதலில் முந்திரிப் பருப்பை வறுத்துவிட்டு அத்துடன் திராட்சையை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்கவிடவும். பின்னர் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை போட்டு வறுத்து பொன்னிறமாக வந்ததும் அத்துடன் வெல்லக் கரைசலை வடிகட்டி ஊற்றவும்.
தீயை மீடியமாக வைத்து ரவையை கிளறிவிடவும்.ரவை வெந்து சிறிது கெட்டியாகி வரும்போது ஏலக்காய் தூள் போட்டு கிளறி அடுத்து வறுத்து வைத்த முந்திரி, திராட்சை,தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறிவிடவும். பின்னர் 2 ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி 5 நிமிடம் மூடிபோட்டு வேகவிடவும். தண்ணீர் வற்றி வெந்து வந்ததும் தீயை அணைத்து விட்டு மீதி இருக்கும் நெய்யை ஊற்றி ஒரு கிளறு கிளறி விடவும். நாவிற்கு ருசியான செட்டிநாடு ரங்கூன் புட்டு ரெடி, சுவைத்து மகிழுங்கள்.