பேக்கரியில் ஓசி பொருள் கேட்டு ரவுடிகள் அட்டகாசம், தட்டிக்கேட்ட ஹார்டுவேர் நந்தகுமாருக்கு அறுவால் வெட்டு!

by ஆசிரியர்
Reading Mode

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள பஜனை கோவில் தெருவில் 09/08/2025 சனிக்கிழமை இரவு சுமார் 10.44 மணியளவில் இருவர் ரூபாய் 70/- க்கு பால்கோவா வாங்கி பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.அப்போது பணம் இல்லாமல் பால்கோவா கொடுக்க முடியாது என பேக்கரி உரிமையாளர் நந்தகுமார் மறுத்துள்ளார்.

அதற்கு ரவுடிகள் எங்கள் ஊரில் கடை வைத்துவிட்டு எங்களுக்கு பொருட்களை தரமாட்டியா என கேட்டு மிரட்டினர்.அப்போது ஓசியில் பால்கோவா கொடுக்க மறுத்த நந்தகுமார் மீது சரமாரியாக கடைக்குள் வைத்து ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.மேலும் எங்கள் ஊரில் கடை வைத்துவிட்டு பொருட்களை தரமாட்டியா என கேட்டு நீ எப்படி எங்கள் ஊரில் பேக்கரி கடையை நடத்தி விடுவாய் என பார்க்கலாம் என தெரிவித்தனர். இந்தநிலையில் நந்தகுமாரின் தாயார் ரவுடிகளை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்.

பின்னர் கடையில் சிசிடிவி கேமரா இருக்கிறதுனால பயந்து விடுவோமா, என்று கூறி கொண்டே பேக்கரி கடையில் உள்ள உணவு பொருட்களை ரோட்டில் எடுத்து வீசியுள்ளனர். இந்தநிலையில் அருகில் இருக்கும் ஹார்டுவேர் கடை வைத்திருக்கும் நந்தகுமாரின் நண்பரான மற்றொரு நந்தகுமாருக்கு தகவல் கொடுத்தவுடன் பேக்கரி கடைக்கு விரைந்து வருகிறார்.

அப்போது ஏன் பொருட்களை எடுத்து வெளியே வீசி உள்ளார்கள் என்று பேசிகொண்டிருந்தபோதே ரவுடிகள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அதே பகுதியை சேர்ந்த ஹார்டுவேர் கடை நடத்தி வந்த நந்தகுமாரை சரமாரியாக ரவுடிகள் தாக்கியுள்ளனர். இதில் நந்தகுமார் ரவுடிகளிடமிருந்து தப்பி ஓடி உயிர் தப்பினார்.

மேலும் ஹார்டுவேர் கடை நந்தகுமாருக்கு பல இடஙகளில் வெட்டுப்பட்டு ரத்த காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.இச்சம்பவம் குறித்து செவ்வாய் பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00