தலைமுடியும், அதில் மறைந்திருக்கும் ஆன்ம சக்தி பற்றியும் தெரியுமா?

by ஆசிரியர்
Reading Mode

தலைமுடியில் ஆன்ம சக்தி நிரவி இருப்பதால் அடிக்கடி தலைமுடியை வெட்டி ஆன்ம சக்தி சக்தியை இழக்காதீர்கள்! பெண்கள் ஆயுள் முழுவதும் முடியைப் பேணுவதால் தாம் அவர்கள் ஆண்களை விட ஏழு மடங்கு மனோதிறனைப் பெறுகின்றார்கள்.

சாதி, இன பேதமின்றி நம் பண்டைய பெரியோர்கள், அரசர்கள், வீரர்கள், மாமுனிகள் குடுமி வகைத் தலைச் சிகையை வைத்திருந்தது முடியின் முடிவிலா ஆன்ம குணத்தைப் புலப்படுத்துகின்றது. எனவே குடுமி வைத்தல் என்பது சமயச் சின்னமன்று! ஓர் அற்புத ஆன்மீகச் சாதனமே குடுமியாகிய தீட்சையாகும்.

தலைக் கேசத்தில் திரளும் சம்பக சக்திகள்!

ப‌ரவெளிக் காற்று மண்டலத்தில் உள்ள சம்பகம் எனும் அரிய கேசவ மண்டல சக்திகள் உடலுக்கும், உள்ளத்திற்கும் மனதுக்கும் நிறைய தேவ சக்திகளை அளிக்கின்றன. கேசவபுல சக்திகள் நிறைந்த மூலிகைகளுள் நெல்லிக்காய், செம்பருத்திப் பூ, செம்பகத் தழை போன்றவை மிகச் சிறந்தவையாம். இச்சம்பக சக்திகள் ரோமங்கள், தலைமுடி, குறித்த சில தைல, எண்ணெய்கள், மூலிகா திரவிய வகைகள், மருதாணி போன்றவை மூலமாக உடலில் உள்ள 72000 தேக நாடி, நாளங்களை அடைகின்றன.

இச்சம்பகச் சக்திகள் பூரிக்கின்ற திருத்தலங்களுள் முக்கியமானவையே கும்பகோணம் அருகே கூந்தலூரில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீசம்பகாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் சிவத்தலமும், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை ஸ்ரீகுடுமிநாதர் சிவாலயமும், ஸ்ரீகேசவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் பெருமாள் அருளும் வைணவக் த‌லங்களும் ஆகும். சம்பக யோகம், சம்பக தியானத்தில் தலைசிறந்தவராய்ப் பொலியும் ஸ்ரீரோமச முனிவர் கூந்தலூர் சிவாலயத்தில் அருள்கின்றார்.ஸ்ரீரோமச மகரிஷி திருக்காட்டுப்பள்ளி.

சுமங்கலித்வ சக்திகள் கேசம், விரல்கள், பாதங்கள், நெற்றி, கழுத்து போன்ற அவயவங்களில் மிகவும் அதிக அளவில் சிறந்து பிரகாசிப்பதால் தான் இவற்றில் சுமங்கலித்வ சக்தியை விருத்தியும், நிறைவும் செய்யும் வகையில் பூக்கள், மெட்டி, மருதாணி, குங்குமம், மாங்கல்யம், மஞ்சள் போன்றவை அணியப் பெறுகின்றன.

ஆகவே ஆன்ம சக்தியைத் தரும் கேசத்தை நாம் நன்முறையில் பாதுகாத்து அனைத்து சம்பக சக்திகளையும் பெற்று நோயில்லாமல் வளமோடு வாழ்வோமாக.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00