ஆடிப்பெருக்கு அன்று தாலி சரடு மாற்றுவதற்கான நல்ல நேரம்.
ஆடி மாதம் அம்மன் மாதமாக போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் அன்னை பராசக்தியை மட்டுமின்றி, நீராகவும் இருந்து மக்களை காக்கும் காவிரி தாயையும் பக்தர்கள் வழிபட்டு, நன்றி தெரிவிக்கும் நாள் தான் ஆடிப் பெருக்கு திருநாள். ஆடி மாதத்தில் மற்ற அனைத்து விசேஷங்களும் கிழமை, நட்சத்திரம், திதி ஆகியவற்றின் அடிப்படையில் தான் சிறப்புடையதாக கொண்டாடப்படும். 18 என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஆடிப்பெருக்கு வழிபாட்டு நேரம் :
ஆடிப்பெருக்கு திருநாள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 03ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வருகிறது.காலை 6 மணி முதல் 9 மணி வரைகாலை 11 மணி முதல் 12 மணி வரைஇந்த இரண்டு நேரங்களில் நமக்கு வசதியான நேரத்தில் வழிபாடு செய்த கொள்ளலாம். அன்றைய தினம் காலை 09.45 வரை நவமி திதி உள்ளது. அதனால் வழிபாடு செய்பவர்கள் காலை 6 முதல் 9 வரையிலான நேரத்தையும், தாலிச்சரடு மாற்றிக் கொள்ள நினைப்பவர்கள் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரையிலான நேரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தாலிச்சரடு மாற்றிக் கொள்ளும் முறை :
புதிதாக திருமணமான பெண்களுக்கு ஆடிப்பெருக்கு நாளில் தாலிப்பெருக்கி போடும் வழக்கம் உள்ளது. அதே போல் திருமணமான பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் காலையில் எழுந்து குளித்து விட்டு, கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிக் கொண்டு, திருமாங்கல்யம் செயினில் போட்டிருந்தாலும், கயிற்றில் போட்டிருந்தாலும் அவற்றை கழுவி சுத்தம் செய்து, நன்றாக துடைத்து விட்டு, புதிய கயிற்றில் கோர்த்து, பூஜைக்காக தயார் செய்து வைத்து பொருட்களுடன் அம்பாளின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பிறகு, வீட்டில் உள்ள மூத்த சுமங்கலிகள் கைகளாலோ அல்லது கணவரின் கைகளாலோ திருமாங்கலயத்தை அணிந்து கொள்ளலாம். ஆடிப்பெருக்கில் தாலிக்கயிறு மாற்றிக் கொண்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.