நாம் வாழுகிற வாழ்க்கை இயற்கையின் கொடை.
இந்த வாழ்க்கையை
வாழத்தெரியாதவர்களே அதிகம்
இந்த வாழ்க்கையை நேசிப்பவர்கள் மிகக் குறைவு.கோபமும்,வெறுப்பும், மன அழுத்தமும் அதிகமாகிக் கொண்டு இருப்பதற்கு காரணம் வாழ்க்கையை நேசிக்காததே அடிப்படை காரணமாகும்.வாழ்க்கையை எப்படி நேசிப்பது என்பதற்கான சில வழிமுறைகளை பார்ப்போம்.
காலத்திற்கு ஏற்றதுபோல்
கனவுகள் மாறும்
மனிதனின் மனமும் மாறும்.
சிலருக்கு தங்கள்
வாழ்க்கையில் அடுத்து
என்ன செய்ய போறோம்னே தெரியாது..!!ஆனால் அழகா அடுத்தவங்களுக்கு
ஐடியா கொடுப்பாங்க.
மனிதர்களின்
குணங்களில் ஒன்று.
தன்னோட எல்லா தவறுக்கும்
பொருத்தமான கதை சொல்வது.
கோபத்தைத் தேவைப்பட்டால்
கேடயமாகப் பயன்படுத்துங்கள்.ஆனால்,
ஒரு போதும் ஆயுதமாகப்
பயன்படுத்தி விடாதீர்கள்.
நாம் இன்று ‘சிரிக்கும் புத்தர்’
என்று அழைக்கிற ஜென் துறவியை அந்நாளில் சீனாவில்’சந்தோஷச் சீனன்’ என்று அழைத்தார்கள்.
அவர் எப்போதும் யாருக்கும் போதித்ததில்லை. ஒரு மூட்டை நிறைய இனிப்புகள்,பழங்கள்,கடலை மிட்டாய் என்று தின் பண்டங்களை வைத்தபடி வீதியில் உலவுவார்.அவரைச் சுற்றிலும் எப்போதும் உற்சாகமான குழந்தைகள் கூட்டத்தைப் பார்க்கலாம்.
ஜென் ஆர்வலர்களைக் காணும் போதெல்லாம் கை நீட்டி ‘ஒரு ரூபாய் கொடுங்கள்’ என்று கேட்பார். சீடர்களுக்கு போதிக்க வரும்படி அழைக்கிறவர்களிடமும் அதேதான் கேட்பார்.
அவர் ஜென்னைப் புரிந்து கொண்டிருக்கிறாரா என்கிற ஐயம் ஏற்பட்ட குரு ஒருவர் அவரிடம்,
‘ஜென்னின் முக்கியத்துவம் என்ன?’ என்று கேட்டார்.
பதிலேதும் சொல்லாமல் சுமந்துகொண்டிருந்த மூட்டையை இறக்கித் தரையில் வைத்தார்.
‘ஜென் கூறும் நிஜம் என்ன?’என்றார் குரு தொடர்ந்து.
மூட்டையைத் தூக்கித் தோளில் சுமந்தபடி சந்தோஷமாக நடக்கத் தொடங்கினார்.
இந்தக் கதை என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ராமகிருஷ்ணர் பற்றிச் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.
நீர் மேல் நடந்து காட்ட
முயன்ற ஒரு சீடரை ராமகிருஷ்ணர் அழைத்து,
‘ஆற்றின் அக்கரைக்குப் போக படகுக்காரன் எவ்வளவு கேட்பான்?’ என்று கேட்டார்.
‘நாலணா’ என்றார் சீடர்.
‘நாலணா பெறுமானமுள்ள ஒரு செயலைச் செய்யவா உன் யோக வலிமையைப் பயன்படுத்துகிறாய்?’ என்று கேட்டாராம் ராமகிருஷ்ணர்.
போதனைகளும் அவற்றைக் கேட்கச் செலவிடும் நேரமும் ஒரு ரூபாய் மதிப்புடையவையே. அவற்றைக் காட்டிலும் வாழ்கிற வாழ்க்கையை சந்தோஷமாக வாழத் தெரிந்து கொள்வதுதான் சிறப்பு.
வாழ்க்கையே சுமையாகத் தெரியும்போது அந்தச் சுமையை
இறக்கி வைக்க ஆன்மிகத்தை நாடுவது சராசரி மனிதனின் மனப்பாங்கு.
வாழ்க்கை சுமக்க முடியாத ஒன்றல்ல என்பதையும், அதைச் சுமப்பதே ஒரு சந்தோஷம் என்பதையும் உணரலாம் என்பதே சிரிக்கும் புத்தர் சொல்ல முயன்ற கருத்து.
அவர்களை புண்பட வைத்தேன் என்பது பெருமையல்ல.
அவர்களை புன்னகைக்க வைத்தேன் என்பது தான் பெருமை.