அம்மா!!!!

by ஆசிரியர்
Reading Mode

🌸 அம்மா!!!

காலை சூரியன் வருவதற்கு முன்
வீட்டுக்குள் ஏற்கெனவே
ஒளி வந்துவிடும்…
அது அடுப்பின் அருகே நிற்கும்
ஒரு பெண்மணியின் நிழல்.

என் பசிக்காக,
பசியை மறந்த உதடுகள்,
என் நிம்மதிக்காக,
தூக்கத்தை மறந்த கண்கள்…

அவள் சிரித்தால்
வீடு கதிரவன் போல பிரகாசிக்கும்,
அவள் அமைதியாக இருந்தால்
வீடு சந்திரன் மறைந்த இரவு போல இருண்டுவிடும்.

ஒரு கை என் தலையை தடவியது,
அதே கை நகரமெங்கும் துணிகளைச் சுமந்து
விற்றுக் கொண்டே வாழ்க்கையை ஓட்டியது…
அந்தக் கையில் வலி இருந்தாலும்
அதிலிருந்த பாசம் மட்டும்
வலியை மறைத்துவிட்டது.

நான் வளர்ந்தபோது
அவள் சுருங்கினாள்,
நான் வலுவானபோது
அவள் மெலிந்தாள்.

இப்போது…
வீட்டு கதவின் சத்தம் கூட
என்னை வரவேற்கவில்லை.
பொதுவாக சமைத்த வாசனை,
இன்று அடுப்பே மூடியது போலிருக்கிறது.

கண்ணாடியில் நான் பார்த்தால் –
என் முகம் அல்ல,
என்னை வளர்த்த அம்மாவின் முகம்தான் தெரிகிறது.


அம்மா என்பது…
வாழ்க்கையில் நம்மை உயிரோடு வைத்த நிழல்,
இறந்தபின் கூட
நம்மை நினைவோடு வாழ வைக்கும் ஒளி.

                      வலிகள் / வரிகள்

                      ராஜவர்மன்                                            

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00