திருமணத்தின் போது, பொருத்தம் பார்ப்பதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை !!?

by ஆசிரியர்
Reading Mode

திருமணத்தின் போது, பொருத்தம் பார்ப்பதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை !!?ஜாதகத்தில் , திருமணத்தின் போது , பத்து பொருத்தம் பார்ப்பதை விட , எவை,எவை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்?

10 பொருத்தத்தில், 8 பொருத்தம் உள்ளது 9 பொருத்தம் உள்ளது என்பதை விட ,
ஒரு ஜாதகத்தில் கீழ்க்கண்ட அமைப்புகள் சரியாக இருந்தால் மட்டுமே, அந்த திருமணத்தில் ஜாதகத்தை இணைக்க வேண்டும்.

1.எந்த ஒரு ஜாதகத்திலும் 7ஆம் அதிபதி, ஜாதகத்தில் நல்ல அமைப்பில் இருக்க வேண்டும்.

2.ஏழாம் பாவகத்தில் , ஒன்றுக்கும் மேற்பட்ட இயற்கை, பாவ கிரகங்களின் சேர்க்கையோ,தொடர்போ இருக்கக்கூடாது.

3.களத்திரகாரகன் சுக்கிரன், ஒரு ஜாதகத்தில் முற்றிலும் கெட்டிருக்க கூடாது.

4.ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை குறிப்பிடும் 5ஆம் அதிபதி, முற்றிலும் வலு இழக்கக் கூடாது.

5.ஐந்தாம் பாவகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இயற்கைப் பாவ கிரகங்களின், சேர்க்கையோ, தொடர்போ இருக்கக் கூடாது.5ம் அதிபதி வலு இழக்கவே கூடாது.

6.குரு ஒரு ஜாதகத்தில் முற்றிலும், பலம் இழந்த நிலையில் இருக்கக்கூடாது.

7.குடும்ப ஸ்தானாதிபதி எனப்படும் இரண்டாம் இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாவ கிரகங்களின் சேர்க்கையோ அல்லது இரண்டாம் அதிபதி முற்றிலும் பலம் இழந்த நிலையிலோ இருக்கக்கூடாது.

8.ஆண் , பெண் ஜாதகத்தில் இருவருக்கும் சஷ்டாஷ்டக தசா புத்திகளோ அல்லது இருவருக்கும் எதிர்மறையான தசா புத்திகளோ ஆரம்பிக்கக்கூடாது (உதாரணமாக குரு திசை 16 வருடம் ,சுக்கிர திசை 20 வருஷம் இரு கிரகங்களும் எதிர்ரெதிர் தன்மையைக் கொண்டவை.
சுய ஜாதகத்தில் இந்த கிரகங்கள், எதிர் மறையான பலனை தரக்கூடிய அமைப்பில் இருந்தால், நிச்சயமாக தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை மேலோங்கி நிற்கும்.

9.குடும்ப உறவுகள் எனப்படும் மாமனார் ,மாமியார் ஸ்தானமும் , சம்பந்தப்பட்ட வரனின் சகோதர அமைப்புகளும்,அதன் பாவக அமைப்புகளும், கவனிக்கப்பட வேண்டும்.

10.எல்லாவற்றிற்கும் மேலாக,சம்பந்தப்பட்ட வரனின் குணநலன்களுக்கு ,
லக்னத்தையும், லக்னாதிபதியும், அதோடு ஆயுள் ஸ்தானத்தையும், ஆயுள் ஸ்தானாதிபதியின் நிலையையும் ,அடுத்தடுத்து மாரக தசைகள் ஏதேனும் வருகிறதா? என்பதையும் ,கண்டிப்பாக ,ஆராய்ந்து பார்த்த பிறகே, ஒரு ஜாதகத்தை இணைக்க வேண்டும்.

மேற்சொன்ன பத்து விதிகளையும் , தரமாக ஆராய்ந்து ,ஜாதகத்தை இணைத்தோயோமானால் ,எந்த சூழ்நிலையிலும் , அவர்கள் மனமொத்த தம்பதிகளாக வாழ்வர் என்பதில் மாற்று கருத்து இல்லை.

இதைத் தவிர சஷ்டாஷ்டக லக்னங்கள் , சஷ்டாஷ்டக ராசிகள் , தவிர்த்து ,யோனி, மகேந்திரம்,ரஜ்ஜீ ஆகியவை 10 பொருத்தத்தில் சரியாக இருந்தால், அந்த ஜாதகத்தை தாராளமாக இணைக்கலாம்.

மேற்சொன்ன விதிகளை ஆராய்ந்து, உங்கள் லக்ன, ராசிக்கு ஓரணி கிரகங்களில் உள்ள ஐந்து ,ஒன்பதாம் அதிபதிகளை இணைத்தால் ,
கருத்தொருமித்த தம்பதிகளாக கடைசி வரை வாழ்வர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00