அஸ்வமேத யாகத்திற்கு ஒப்பான ஒரு பூஜை பற்றி தெரியுமா !!?

by ஆசிரியர்
Reading Mode

அஸ்வமேத யாகத்திற்கு ஒப்பான ஒரு பூஜை பற்றி தெரியுமா !!?

பாத பூஜை பற்றிய தகவல்கள்…

பாத பூஜை செய்யும்போது ஒருவரின் அனைத்து பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

அஸ்வ மேத யாகத்திற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது.பித்ரு தோஷம் விலகும் என்பது ஐதீகமாகும்.மேலும், பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்ய பரிபூரண ஆசி கிட்டும்.

யாருக்கு பாதபூஜை
பாத பூஜையானது பெற்றோர்கள், பெற்றோர் ஸ்தானத்தில் உள்ளவர்கள், குருக்கள், மகான்கள் ஆகியோருக்கு செய்யும் புண்ணிய செயலாகும்.

வணங்கும் முறையில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறுவார்கள் அந்த வரிசையில் பெற்றோர்களுக்கு முதலில் பாதபூஜை செய்வது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

இன்றும் சிலர் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்வதை சம்பிரதாயமாக கொண்டுள்ளனர்.

பாதபூஜை செய்வது எப்படி
பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, ஆடி பௌர்ணமி (குரு பூர்ணிமா) போன்றவை பாத பூஜை செய்ய உகந்த நாட்களாக கூறப்படுகிறது.

பாதபூஜை பெறுபவரின் கால்களை ஒரு தாம்பாளத்தில் வைத்து, மஞ்சள் நீரால் கால்களை கழுவி சந்தனம், குங்குமமிட்டு தூய பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

பின்னர், தீபங்களால் ஆராதனை மீண்டும் சந்தனம், குங்குமம் வைத்து புஷ்பங்களால் ஆராதிக்க வேண்டும்.

அவர்களின் கால் அபிஷேக நீரை தலையில் தெளித்து கொண்டு எஞ்சிய நீரை யார் காலடியும் படாத ஓரிடத்தில் ஊற்றி விடுவது நல்லது.

பாதபூஜை பெறுபவர் மனமானது தூய உள்ளத்துடன் கடவுளின் நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு :

நீங்கள் பாத பூஜை செய்பவரை கடவுளுக்கு நிகராக நினைக்கும் பட்சத்தில் பாத பூஜை செய்யலாம். அவ்வாறில்லையெனில், பாத பூஜைசெய்வதை தவிர்ப்பது நல்லது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00