20 வயது பையனின் அசாத்திய செயல் ! அரசால் கூட செய்யாததை அசால்ட்டாக செய்துள்ளார்!!?

by ஆசிரியர்
Reading Mode

20 வயது பையனின் அசாத்திய செயல் ! அரசால் கூட செய்ய முடியாததை அசால்ட்டாக செய்துள்ளார்!!?

மத்திய பிரதேசம், ராஜ்கர் மாவட்டத்தில் இருக்கிற பியாவோரா என்கிற சின்ன ஊர்ல தான் இந்த அதிசயம் நடந்திருக்கு.

அங்க ஓடுன அஜ்னார் நதி, ஒரு காலத்துல ஊருக்கே உயிர் மாதிரி இருந்துச்சு. ஆனா பராமரிப்பு இல்லாம, போக போக குப்பை கொட்டுற இடமா மாறிடுச்சு. பிளாஸ்டிக் குப்பை, சாக்கடை தண்ணி, பாசி படர்ந்து நாற்றம் தாங்க முடியாம மக்கள் அந்த பக்கமே போகாமல் இருந்தாங்க.

கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்னைக்கு, 20 வயது இளைஞர் பிட்டு தபாஹி தன்னோட நண்பர்களோட சேர்ந்து இந்த நதியை சுத்தம் பண்ணலாம்னு இறங்கியிருக்கார். வேலை மிக பெரியதுனு தெரிஞ்சதும் நண்பர்கள் ஒவ்வொருத்தரா விலகிட்டாங்க. ஆனா பிட்டு மட்டும் விடவே இல்லை.

கையில் கிளவுஸ் இல்லை, காலில் பூட்ஸ் இல்லை, பாதுகாப்பு உடை எதுவுமே இல்லை. அவருக்கு நீச்சல் கூட தெரியாது. இருந்தும் தினமும் மதியம் 3 மணியில இருந்து 6 மணி வரை அந்த சேறும் சகதியுமான தண்ணிக்குள்ள இறங்கி, தன் கையாலேயே குப்பையை அள்ளியிருக்கார்.

ஒன்றரை மாசத்துல மட்டும் ரெண்டு லாரி அளவுக்கு குப்பையை வெளியே எடுத்திருக்கார். தினமும் சராசரியா 10 கிலோ குப்பை. இதுக்காக அவரும் நண்பர்களும் சேர்ந்து சொந்த காசுல இருந்து சுமார் 30,000 ரூபாய் செலவு பண்ணியிருக்காங்க. அரசாங்கத்திடம் இருந்தோ, நகராட்சியிடம் இருந்தோ எந்த உதவியும் கிடைக்கல.

நதியில் விடப்பட்ட பூஜை பூக்கள், சாமி பொருட்களை கூட தூக்கி எறியாம, அதை உரமா மாற்றி மறுபடியும் மாசு ஏற்படாம பார்த்துக்கிட்டார்.

ஆரம்பத்துல இவரை பார்த்து சில பேர் கிண்டல் பண்ணாங்க, வீடியோவுக்காக பண்றான்னு சொன்னாங்க. ஆனா அவரோட உண்மையான உழைப்பு எல்லோருக்கும் தெரிய ஆரம்பிச்சதும் நிலைமை மாறுச்சு. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூட இவரை தன்னோட X பக்கத்துல “Monday Motivation”னு பாராட்டினார். இன்னைக்கு இன்ஸ்டாகிராம்ல ஒரு லட்சத்துக்கும் மேல ஃபாலோயர்ஸ். பலரும் இவரை மலை மனிதர் தஷ்ரத் மான்ஜி உடன் ஒப்பிட்டு பேசுறாங்க.

ஒரு 20 வயது மாணவனால் தனியா நின்னு ஒரு இறந்து போன நதிக்கு உயிர் கொடுக்க முடியும்னா, பல வருஷமா அதிகாரத்தில் இருந்தவங்களால் ஏன் முடியல? இது வெறும் நதி சுத்தம் பண்ண கதை இல்லை, ஒரு தனி மனிதனின் மன உறுதி எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வரும்னு காட்டுற பாடம்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00