நதிகளுக்கும் ஏற்படும் மாதவிலக்கு ! தெரியுமா உங்களுக்கு !!?

by ஆசிரியர்
Reading Mode

நதிகளுக்கும் ஏற்படும் மாதவிலக்கு ! தெரியுமா உங்களுக்கு !!?

நதிகளுக்கும் வருடத்திற்கு மூன்று நாள் மாதவிலக்கு ஏற்படும் அற்புதம்
பற்றி தெரியுமா?என்னது ?, நதிகளுக்கு மூன்று நாள் மாதவிலக்கா ?
இதுவரையில் கேள்விப்பட்டதே இல்லையே! என்றுதான் நினைக்கத் தோன்றும் ஆனால் இது இந்த பிரபஞ்சத்தின் இயற்கையின் அதி அற்புதமான நியதி என்பது உசிதமாகும்.

பொதுவாக ஆடி மாதத்தில் முதல் மூன்று நாட்களில் இது ஏற்படும்.இதற்கு ‘சர்வ நதி மாதவிலக்கு’ எனப்பெயர். நம் இல்லத்து ஸ்த்ரீகளுக்கு மாதாமாதம் வரும் மாதவிலக்கு போல இது.

பெண்களுக்கு வரும் மாதவிலக்கு போல நதிகளுக்கும் வருடத்திற்கு மூன்று நாட்கள் விலக்கு (விடுமுறை). அது ஒவ்வொரு வருடமும் ஆடி முதல்  மூன்று நாட்களாகும். 
அந்த மூன்று நாட்களில் யாரும் எந்த நதியிலும் குளிக்கக் கூடாது.

மகா பாபம்.

ருனத்ரயமான தேவ,பித்ரு, ரிஷிகளுக்கு உத்தேசித்து செய்யப்படும் எந்த பித்ரு தர்ப்பண கார்யங்களுக்கும் ஆடி மாதம் முதல் மூன்று நாட்களுக்கு
நதிகளிலிருந்து
தீர்த்தம் எடுத்து உபயோகப்படுத்தக்கூடாது

பூஜை, திதி செய்வதற்கும் நீர் எடுப்பதில்லை.
எல்லா நதிகளுக்கும் இந்த தீட்டு உண்டு,ஆனால் பிரம்மபுத்ரா நதிக்கும் கங்கைக்கும் மட்டும் தீட்டு கிடையாது.நதி தீர்த்த கரைகளில் செய்யப்படும் எந்த விதமான சங்கல்பங்களும் எடுபடாது.

எனவே இப்பிரபஞ்சத்தின் இயற்கையின் நியதிகளுக்கு நாம் கட்டுப்பட்டு ஆடி மாதம் ஒன்றாம் நாள்! இரண்டாம் நாள்! மூன்றாம் நாள் ஆகிய மூன்று தினங்களுக்கும் எந்த நதிகளிலும் நீராடாமலும், பித்ரு காரியங்களுக்கு ஜலம் எடுக்காமலும் இருந்து இயற்கையை மதித்து ரிஷிகளும் சித்தர்களும் ஞானிகளும் நமக்குக் கொடுத்த வாழ்வியல் முறையை பின்பற்றி சிறப்புடன் வாழ்வோமாக!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00