வீர விளையாட்டு களில் தங்கம் வென்று சாதனை !அமைச்சர் டி.கே.பிரபு வாழ்த்து !!
புதுடில்லி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானலில் சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குங்க்பூ மற்றும் வாழ்வீச்சுப் போட்டிகளில் தேவகோட்டையை அடுத்த கீழ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விஷ்மயா மற்றும் ஐஷ்மபா ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
எஸ்.பி.கே.எஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற இந்த மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர். டி.கே. பிரபு நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.