தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டி சாய்ப்பு ! விசாரணை தீவிரம் !!?

by ஆசிரியர்
Reading Mode

தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சட்டவிரோதமாக லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டி சாய்ப்பு ! விசாரணை தீவிரம் !!?

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 600க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும் 200 மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் வருகின்றனர்.

இந்த மருத்துவமனை வளாகத்தில் பழமையான வேம்பு ,வாகை ,பலா ,அசோகா உள்ளிட்ட மரங்கள் இருந்தன.

இம்ம மரங்களின் நிழல் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருந்ததோடு, வெயில் காலங்களில் வெப்பத்தின் தாக்கத்தையும் குறைத்தது.

இந்நிலையில் திடீரென அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டு அவற்றை வெளியே அள்ளிச் செல்லவும் முயற்சிகள் நடந்துள்ளன.

இந்த சட்ட விரோத செயலை அறிந்த இந்து முன்னணி நகரத் தலைவர் சுரேஷ் வட்டாட்சிய தங்கமணியிடம் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் அங்கு வந்த வட்டாட்சியர் தலைமையிலான வனத்துறையினர் வெட்டப்பட்ட மரத்துண்டுகளை விற்பனை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து அனுமதியின்றி மரங்கள் வெட்டியது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் ஏற்கனவே இதே மருத்துவமனை வளாகத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

தேவகோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டதாக கடுமையான புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இதற்குரிய அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் நோயாளிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00