நட்சத்திரங்கள் தெரியும் ! நட்சத்திரத்திற்குரிய 27 பூத கண வேதாளங்கள் பற்றி தெரியுமா !!?
செய்யூர் கந்தசுவாமி கோவிலில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் வேறு எந்த ஊரிலும் உள்ள கோவில்களில் இல்லாத ஒன்றாகும். அது வெளிப்பிரகாரத்தை சுற்றி அமைந்துள்ள நட்சத்திர பூத கண வேதாளங்களாகும்.
சாதாரணமாக நாம் வேதாளங்களைப் பற்றி விக்கிரமாதித்தன் கதையில் படித்திருப்போம். ஆனால், இங்குள்ள வேதாளங்கள் முருகன் சூரபத்மனையும், பிற அரக்கர்களையும் வதைக்கும் போது அவருக்கு துணை புரிந்த சிவகணங்களாகும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக மொத்தம் 27 பூத கண வேதாளங்கள் இக்கோவிலைச் சுற்றி அமைந்திருப்பது ஒரு இன்றியமையாத தனிச்சிறப்பாகும்.

தேய்பிறை அஷ்டமி அன்று மாலை “வேதாள பூஜை” விநாயக சங்கல்பத்துடன் தொடங்குகிறது. பிறகு 5 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கு செவ்வரளி பூக்களால் பூஜையும், மாலை 7 மணிக்கு மூலவர் அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பைரவருக்கு அஷ்ட புஷ்பார்ச்சனையும் நடைபெறுகின்றது.
27 நட்சத்திர பூத வேதாளங்களின் பட்டியல் !!?
01) அஸ்வினி – நாகாயுதபாணி பூத வேதாளம்
02) பரணி – வஜ்ரதாரி பூத வேதாளம்
03) கிருத்திகை – வைராக்கிய பூத வேதாளம்
04) ரோகிணி – கட்கதாரி பூத வேதாளம்
05) மிருகசீரிஷம் – ஞானபூத வேதாளம்
06) திருவாதிரை – தோமரபூத வேதாளம்
07) புனர்பூசம் – வக்ரதந்த பூத வேதாளம்
08) பூசம் – விசாள நேத்ர பூத வேதாளம்
09) ஆயில்யம் – ஆனந்தபைரவபக்த பூத வேதாளம்
10) மகம் – ஞான ஸ்கந்த பக்த பூத வேதாளம்
11) பூரம் – தர்பகர பூத வேதாளம்
12) உத்திரம் – வீரபாகு சேவக பூத வேதாளம்
13) ஹஸ்தம் – சூரபத்ம துவம்ச பூத வேதாளம்
14) சித்திரை – தாரகாசுர இம்ச பூத வேதாளம்
15) சுவாதி – ஆனந்த குக பக்த பூத வேதாளம்
16) விசாகம் – சூர நிபுண பூத வேதாளம்
17) அனுஷம் – சண்டகோப பூத வேதாளம்
18) கேட்டை – சிங்க முகாசுர இம்ச பூத வேதாளம்
19) மூலம் – பராக்ரம பூத வேதாளம்
20) பூராடம் – மஹோதர பூத வேதாளம்
21) உத்திராடம் – ஊர்த்துவ சிகாபந்த பூத வேதாளம்
22) திருவோணம் – கதாபரணி பூத வேதாளம்
23) அவிட்டம் – சக்ரபாணி பூத வேதாளம்
24) சதயம் – பேருண்ட பூத வேதாளம்
25) பூரட்டாதி – கோரரூப பூத வேதாளம்
26) உத்திரட்டாதி – குரு பைரவ சேவக பூத வேதாளம்
27) ரேவதி – குரோதன பைரவ பக்த பூத வேதாளம்
மேலும் இக்கோவிலில் பெரியாண்டவர் பூஜையும் அனுஷ்டிக்கப் படுகிறது.
கோவிலுக்கு வெளியே நவசந்தியில் நவக்கிரகங்கள் பூஜித்த விநாயகர்கள் காணப்படுகிறார்கள். இதுவும் இக்கோவிலின் ஒரு தனிச்சிறப்பாகும்.
இக்கோவிலிற்கு மேற்கே செட்டிகுளம் என்ற திருக்குளம் உள்ளது. செட்டி என்பது முருகனின் ஒரு திருப்பெயர். இக்குளம் ஆலயத்திற்கு சொந்தமானது.
இருப்பிடம் செய்யூர் மதுராந்தகத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவிலும், கிழக்கு கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோயில் நிறுத்தத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மேற்குறிப்பிட்ட செய்யூர் கந்தசாமி ஆலயத்தில் உள்ள நட்சத்திர பூத கண ஏதாவது தெய்வங்களை தேய்பிறை அஷ்டமி என்றும் அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கும் வழிபட்டு வர வேண்டிய காரியங்கள் வேண்டிய படியே கிடைக்கும் என்பதே திண்ணம்.