நாகர்கோவில் மாநகராட்சி கழிப்பறையில் விலை ஏறும் சிறுநீரும் மலமும்.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையம் மற்றும் பிற பகுதிகளில் இயங்கி வரும் கட்டண கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்க ரூபாய் 2 , மலம் கழிக்க ரூபாய் 3 ம் வசூலிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.
இருந்தும் ஒப்பந்ததாரர்கள் ரூபாய் 5 , 10 என தங்கள் விருப்பம் போல் வசூலித்து வந்தனர். பேருந்தில் நெடுந்தூர பயணத்தில் வருபவர்கள் அவசரம் கருதி இயற்கை உபாதைகளை கழிக்க கேட்ட கட்டணத்தை கொடுத்து வந்தனர்.
தற்போது மாநகராட்சி ஆணையர் பெயரில் சிறுநீர் கழிக்க ரூபாய் 5 ம், மலம் கழிக்க ரூபாய் 10 என சுவரில் எழுதி வைத்து ரூபாய் 10 கட்டாய வசூல் நடைபெற்று வருகிறது.
இந்த கட்டாய வசூலை கண்டு கொள்ளாமல் இருக்க சிறுநீர் மற்றும் மலம் வருவாயில் மாநகராட்சியின் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கமிஷன் செல்வதாக தகவல்.
சிறுநீர் மற்றும் மலத்திலேயே இவ்வளவு கமிஷன் பார்த்து வயறு நிறைப்பவர்கள், மாநகராட்சியின் மற்ற பணிகளில் எவ்வளவு கமிஷன் பார்ப்பார்கள் என பயணிகள் கேள்வி.
அதனால் மாநகராட்சி மேயர் அவர்கள் உடனடியாக இந்த கட்டாய வசூலை தடுத்து, அதிக கட்டணம் வசூலித்த ஒப்பந்தாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, கண்காணித்து நடவடிக்கை எடுக்க தவறிய சம்மந்தப்பட்ட அலுவலர் மீதும் நகவடிக்கை எடுப்பதோடு உடனடியாக உயர்த்தப்பட்ட கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் .