வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழாவில் பகல் கொள்ளை!? மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா???

by ஆசிரியர்
Reading Mode

வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழாவில் பகல் கொள்ளை!? மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா???

வீரபாண்டி திருக்கோயில் “கௌமாரிஅம்மனை பார்க்க 30 ரூபாய் டிக்கெட்டா? ராட்டினம் ஏரியா நுழைவு கட்டணமாக தலைக்கு 30 ரூபாய் வீதம் நாளொன்றுக்கு ரூபாய் 15 இலட்சம்..,08 நாளைக்கு 01 கோடியே 20 இலட்சம் பகல் கொள்ளை..!

மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா?
தென்னிந்திய ஆலய பாதுகாப்பு அறக்கட்டளையினர் எதிர்பார்ப்பு…..

தேனி மாவட்டம், வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழாவுல இப்போ புது கொள்ளை ரெடி ஆகுது…கோயில் ராட்டினம் ஏலம் எடுத்த கும்பல், “ராட்டினம் பகுதிக்குள்ள நுழையணும்னா 30 ரூபாய் கட்டணம்”னு போர்டு வைக்க தயாராகிட்டானுங்க. அம்மனை தரிசிக்க வர்ற பக்தன், ராட்டினம் வேடிக்கை பார்க்க வந்த சின்ன புள்ளைங்க… எல்லார் தலையிலும் கை வைக்க பிளான். இதுக்காகவே 4 நுழைவு வாயில் அமைச்சு, வசூல் வேட்டைக்கு ரெடியா இருக்காங்க-னு…, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் புலம்புறாங்க…

“கோயில் திருவிழாவா? இல்ல கொள்ளையர் கூடாரமா?”னு..,*
கணக்கு போட்டு பாருங்க மக்கா.., இது தென்னிந்திய ஆலய பாதுகாப்பு அறக்கட்டளையின் தோராய கணக்கு இதோ..
ஒரு நாளைக்கு தோராயமாக 50 ஆயிரம் பக்தர்கள் வந்தால்… 30 ரூபாய் x 50 ஆயிரம் பக்தர்கள் = 15 இலட்சம் ரூபாய்..?! இந்த 15 இலட்சம் ரூபாய் என்பது ஒரு நாளைக்கு மட்டும் தான்.
வீரபாண்டியில் வெகு விமர்சியாக திருவிழாவானது சுமார் 08 நாட்கள் நடைபெறும்.
ஆக, 08 நாட்கள் x15 இலட்சம் = 01 கோடியே 20 லட்சம் ரூபாய் எனதாக, 08 நாளைக்கு 01 கோடியே 20 லட்சம் ரூபாய் என்ற வகையில் கோடிக்கணக்கான தொகையில் கட்டண கொள்ளை..
இது வெறும் நுழைவு கட்டண கொள்ளை மட்டும்தான். ராட்டினம், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் அமைக்கிறவங்க கிட்ட தனியா மாமூல் வசூல் வேற.

மொத்தத்துல பல லட்சம் மோசடிக்கு கோயில் வளாகத்துலயே களம் அமைச்சாச்சு.*
கோயிலுக்கு வர்ற பக்தனை ஏமாத்தி பணம் பறிக்கிறது எந்த ஊரு தர்மம்..? ராட்டினம் ஏலம் எடுத்தா, ராட்டினத்துல ஏற கண்ணியமான முறையில் டிக்கெட் விக்கணும். அதை விட்டுட்டு, அந்த ஏரியாவுக்குள்ள நுழையவே காசு கேக்குறது பச்சை அயோக்கியத்தனம்.
அது சமயம், தேனி மாவட்ட ஆட்சியர் உடனடியா களத்துல இறங்கணும்.

சமானிய, அப்பாவி, நடுத்தர வர்கத்து பாவப்பட்ட மக்களின் நிலையை உணர்ந்து இந்த 30 ரூபாய் நுழைவு கட்டண கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையேல் வெட்ட வெளிச்சமாக லட்சக்கணக்கான பக்தர்களின் பணம் சுரண்டப்படும் என்ற அவல நிலை உருவாகும்.
மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தங்களது பங்கிற்கு அறநிலையத்துறையும் காவல்துறையும் வேடிக்கை பார்க்காமல் துரித நடவடிக்கை எடுத்து தேனி மாவட்ட பொதுமக்கள் மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என மதிப்பும், மரியாதைக்கும் உரிய தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தென்னிந்திய ஆலய பாதுகாப்பு அறக்கட்டளையினர் பணிவன்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் புதுசா பொறுப்பேற்றுள்ள அரசு, இந்த மோசடி மன்னர்களை அப்புறப்படுத்தி, கோயில் திருவிழாவை புனிதமா நடத்த வழி வகை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..! இத் தகவலை
தேனி மாவட்ட நிருபர் & மக்கள் அதிகாரம் ,சட்ட தமிழ் மாத இதழ்களின் இணை ஆசிரியர் & தமிழ்நாடு சமூகநல பத்திரிக்கையாளர் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் ,மாவட்ட தலைவர் & தென்னிந்திய ஆலய பாதுகாப்பு அறக்கட்டளையின் தேனி மாவட்ட செய்தி தொடர்பாளர் – வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00