கீரை வியாபாரி கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! நாலு பேருக்கு ஆயுள்!! பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!!??

by ஆசிரியர்
Reading Mode

கீரை வியாபாரி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்: பெண்ணுக்கு இரட்டை ஆயுள் சிறை!

கும்​பகோணத்​தில் கீரை வியா​பாரி கொலை வழக்​கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்​டனை​யும், பெண்​ணுக்கு இரட்டை ஆயுள் தண்​டனை​யும் விதித்து கும்​பகோணம் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது. தஞ்​சாவூர் மாவட்​டம், கும்​பகோணம் அருகே வலை​யபேட்டை, மாங்​குடி பகு​தி​யைச் சேர்ந்​தவர் பன்​னீர்​செல்​வம்​(வயது 55). கீரை வியா​பாரி.

இவரது மைத்​துனர் மணி​யின் மகன்​களான அபினேஷ், அஜய் ஆகியோர் 2020-ம் ஆண்டு மே மாதம் நண்​பர் ஒரு​வர் வீட்​டில் கேரம் விளை​யாடிக் கொண்டிருந்தனர்.

அப்​போது, அங்கு வந்த அதபகு​தி​யைச் சேர்ந்த சவுந்​த​ர்ராஜன் மகன் அருண்​கு​மார்​(வயது 36) மது போதை​யில் தகாத வார்த்​தை​யில் பேசிக்​கொண்டு இருந்​துள்​ளார். அவரை அபினேஷ் கண்​டித்து அங்​கிருந்து அனுப்​பி​விட்​டார். சில நாள் கழித்து அபினேஷ் வீட்​டுக்​குச் சென்ற அருண்​கு​மார், அங்​கிருந்த அபினேஷ், அஜய் உள்​ளிட்​ட​வர்​களை தாக்​கி​யுள்​ளார். மறு​நாள் இரவு மீண்​டும் அபினேஷ் வீட்​டுக்கு சென்ற அருண்​கு​மார் தரப்​பினர் அங்​கிருந்த அபினேஷ் தரப்​பினரிடம் தகராறில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, அருண்​கு​மாரின் தந்தை சவுந்​தர்​ராஜன்​(வயது 64), தாய் ருக்​மணி(வயது 55), உறவினர்​கள் சுரேஷ்(வயது 37), பாலாஜி(வயது 30) ஆகியோர் சேர்ந்து அபினேஷ் தரப்​பினரை தாக்​கினர். இதில், அபினேஷின் உறவினர்​கள் ரகுப​தி, கிருஷ்ண​மூர்த்​தி, அருள் ஆகியோர் காயமடைந்தனர்.

அப்​போது அங்கு வந்த கீரை வியாபாரியான பன்​னீர்​செல்​வம் இரு தரப்​பினரை​யும் சமா​தானப் படுத்த முயன்​றார். இதில், அருண்​கு​மார் தரப்​பினர் அரி​வாளால் வெட்​டிய​தில் பன்​னீர்​செல்​வம் பலத்த காயமடைந்​தார். இதையடுத்​து, கும்​பகோணம் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்ட பன்​னீர்​செல்​வம் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து ரகுபதி அளித்த புகாரின்​பேரில் கும்​பகோணம் தாலுகா போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்து அருண்​கு​மார், அவரது தந்தை சவுந்​தர்​ராஜன், தாய் ருக்​மணி, உறவினர்​கள் சுரேஷ், பாலாஜி ஆகியோரைக் கைது செய்​தனர்.

இவ்​வழக்கு கும்​பகோணம் கூடு​தல் மாவட்ட நீதி​மன்​றத்​தில் நடைபெற்று வந்​தது. இந்நிலையில் இந்த வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளி​யும், கொலைக்கு தூண்​டு​தலாக இருந்​தவருமான ருக்​மணிக்கு இரட்டை ஆயுள் தண்​டனை​யும், சவுந்தர்​ராஜன், அவரது மகன் அருண்​கு​மார், உறவினர்​கள் பாலாஜி, சுரேஷ் ஆகியோ​ருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதித்து நீதிபதி தீர்ப்​பளித்​தார்.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00