பத்மாசனமும் அதனால் கிடைக்கும் பயன்களும்!!??

by ஆசிரியர்
Reading Mode

யோகா பாயை தரையில் விரித்து அதன்   மீது   அமருங்கள்.பிறகு, உங்கள் வலது காலை வளைத்து, குதிகாலை இடது தொடையில்   வைக்கவும்.அதே போல் உங்களின் இடது குதிகால்,வலது தொடையில் இருக்கும் வகையில் இடது காலை வளைக்கவும்.இப்போது உங்கள் இடுப்பு மற்றும் கழுத்தை நேராக வைத்திருக்க வேண்டியது    அவசியம்.

அடுத்ததாக, உங்கள் கை விரல்களால் ஞானமுத்ராவை செய்து, இரு கைகளையும் முழங்காலின் மேல் வைக்கவும்.இதைச் செய்யும்போது, உங்கள் முழங்கைகள் வளையாமல் பார்த்துக்     கொள்ளுங்கள்.
ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள்.
உங்கள் சுவாசத்தின் இயக்கத்தில் முழு கவனத்துடன் ஈடுபட முயற்சி செய்யுங்கள். உங்களால் முடிந்த வரையில் இந்தத் தோரணையில் இருக்கலாம்.நிறைவு பெறும்போது உடலை மெதுவாகத் தளர்த்திக் கொள்ளுங்கள்.இதே முறையைப் பின்பற்றி நீங்கள் மீண்டும் பயிற்சி செய்யலாம்.

பத்மாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:-

பத்மாசனம் செய்வதன் மூலம் பெண்ணுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறைகிறது.பத்மாசனம் செய்வதால் இடுப்பறையின்  தசைகள் பலப்படுத்துகிறது. இதனால் பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் பிரசவ வலி மிகவும் குறைவாகவே இருக்கும்.பத்மாசனத்தை பயிற்சி செய்தல் மாதவிடாய் வலியையும் குறைக்க உதவுகிறது. இது தசைகளை நீட்சியடையச் செய்து, இடுப்பறைப் பகுதியை வலுப்படுத்துவதால், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகளையும் குறைக்கிறது.பெண்கள் நாள் முழுவதும் பல முனைகளில் வேலை செய்வதால் தாழ்வாகஉணரலாம். ஆனால் தொடர்ந்து பத்மாசனம் செய்யும் பொழுது,உடலின் ஆற்றல் நிலை   அதிகரிக்கிறது, இது அவர்களைச் சுறுசுறுப்பாக   வைத்திருக்க உதவுகிறது.பத்மாசனம் செய்யும்   போது   கண்களை மூடிக்கொண்டு சுவாசத்தில் கவனம் செலுத்துவதால் ஒருமுக சிந்தனையும் அதிகரிக்கிறது.

30 வயதிற்குப் பிறகு, பெண்களின் உடலில் கால்சியம் குறையத் தொடங்குவதால்,முழங்கால் அல்லது மூட்டு வலி வரக்கூடும். குறிப்பாகக் கீல்வாதப்    பிரச்சனையும் பெண்களுக்கு   ஏற்படுகிறது. பத்மாசனம் செய்வதால் முழங்கால் மூட்டு வலியைக் குறைக்கலாம்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00