போயம்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி.
போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு எப்போது…?
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு PN ரோடு போயம்பாளையத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் மாநகர காவல் ஆணையருக்கு கடிதம்.

அதி்ல் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு PN ரோடு போயம்பாளையத்தில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாகி வருகிறது.
பிச்சம்பாளையம், சக்தி நகர், போயம்பாளையம், மும்மூர்த்தி நகர் வரை கடும் நெரிசல் ஏற்பட்டது. வருகிறது.
சாலையோரம் நீண்டகாலமாக தொடரும் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நெருக்கடி தொடர்கிறது.
இது தொடர்பாக தொடர்ச்சியாக பலமுறை புகாரளித்த பிறகும்கூட எவ்வித முறையான தீர்வும் காணவில்லை.
போயம்பாளையம் நான்கு முனை சந்திப்பு பகுதியில், தினசரி காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போயம்பாளையத்தில் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார் நிறுவன வேலைக்கு செல்வோர் இந்த நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
இந்த வழியாக தடையை மீறி கண்டவர்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் போயம்பாளைத்தில் நெரிசல் நிலை தொடர்ந்து வருகிறது.
போயம்பாளையத்தில் நான்குமுனை சந்திப்பில், அனுப்பய்பாளையம் காவல் நிலைய சோதனை சாவடி இருந்தும் பெரும்பாலும் காவலர்கள் இல்லாததால், அலுவல் நேர டிராபிக் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இங்கு நிரந்தரமாக காவலர் அல்லது போக்குவரத்து காவலர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும்.
அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சாலையில் நிற்க கூட முடியாத அவல நிலை தான் உள்ளது.
மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கங்காநகர், அவிநாசி நகர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை ஆய்வு செய்து, போயம்பாளையத்தில் நீடித்து வருகின்ற நீண்டகால டிராபிக் நெரிசல் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.