காரைக்குடியில் களைகட்டும் சட்டவிரோத மசாஜ் மையங்கள் !நடவடிக்கை எடுக்குமா காவல்துறை !!?
சட்டவிரோத மஜாஜ் மையங்கள் பெருக்கம் காரைக்குடியில் கலாச்சார சீரழிவு.
காரைக்குடி நகரில் சட்டவிரோத மசாஜ் மையங்களின் பெருக்கம் அதிகரித்து வருவதாகவும் , மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாகவும் பொது மக்களிடம் இருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த சட்டவிரோத மையங்களின் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள கலாச்சார சீரழிவை கட்டுப்படுத்த முடியாமல் திணறல் நிலை ஏற்பட்டுள்ளது.
காரைக்குடியில் நடந்து கொண்டிருக்கும் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் மசாஜ் நிலையங்களில் காவல்துறையினர் உடனடியாக ஆய்வு செய்து காவல்துறையினர் இந்த குற்றச்சம்பவங்கள் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.