சனி பகவானால் ஏற்படும் தொழில் தடைகளை நீக்க,சனி தோஷத்திற்கான பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.சனியின் தாக்கத்தைக் குறைக்க,சனி ப்ரீத்தி செய்வது நல்லது.மேலும்,ஆதரவற்றோர், முதியோர் போன்றோருக்கு உதவிபுரிவது சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது போன்றவையும் தொழில் தடைகளை நீக்க உதவும்.சனி பகவானால் ஏற்படும் தொழில் தடைகள் மற்றும் அதை நீக்குவதற்கான பரிகாரங்களைப் பார்ப்போம்.
சனி தொழில் ஸ்தானத்திற்கு கோச்சார ரீதியாக 6,8,12 இல் மறைய கூடாது.
சனி லக்னத்திற்கு 6,8,12 இல் மறைவது.
தொழில் ஸ்தானத்திற்கு 6,8,12 இல் கோச்சார சந்திரன் மறைவது.
தொழில் ஸ்தான அதிபதி 6,8,12 இல் மறைவது.
சனி பகவானின் இது போன்ற அமைப்புகள் செய்யும் தொழிலை தடை செய்யும்.அப்படி தொழில் தடை இருந்தால்,அதற்கான பரிகாரத்தை கீழ் உள்ளபடி செய்து வெற்றி பெறலாம்.
பரிகாரம்:-
திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமை
கண்டிப்பாக இளநீர் குடிக்க வேண்டும். இளநீரை யாருக்கேனும் தானம் செய்ய வேண்டும். கோவிலில் சுவாமிக்கு இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.