லக்னத்தில் கேது இருந்தால், ஜாதகர் முகராசி உடையவராக இருப்பார் மற்றும் தாய்வழி பாட்டியிடம் நெருக்கம் அதிகமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். கேது, லக்னத்தில் இருப்பதால், சில சமயங்களில் ஜாதகர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவராகவும், தனிமையை விரும்புபவராகவும் இருக்கலாம்.மேலும், கேதுவின் இருப்பிடம் மற்றும் சேர்க்கைக்கேற்ப பலன்கள் மாறுபடும். கேது மற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால், அந்த கிரகத்தின் காரகத்துவங்களை கேது கட்டுப்படுத்தலாம் அல்லது மாற்றியமைக்கலாம் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
எவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் கேது அல்லது லக்னாதிபதியுடன் கேது சேர்ந்த அமைப்புடைய ஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும், தர்ம சங்கடங்கள்,சம்பவங்கள், ஏமாற்றங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
உதாரணமாக ஒருவர் மேஷம் லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் இவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் கேது இருந்தாலும் சரி அல்லது லக்னாதிபதி செவ்வாயுடன் கேது சேர்ந்து இருந்தாலும் சரி, அதே போன்று ஒருவர் சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் இவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் கேது இருந்தாலும் சரி அல்லது லக்னாதிபதி சூரியனுடன் கேது பகவான் சேர்ந்து இருந்தாலும் சரி.
எனவே, யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் கேது அல்லது லக்னாதிபதியுடன் கேது சேர்ந்து இருக்கின்றதோ அவர்கள் இந்த ஜென்மத்தில் மற்றவர்களுக்கும் தங்களுடைய உறவுகளுக்கும் என்னதான் உதவி செய்தாலும் என்னதான் உழைத்து கொட்டினாலும் அதற்கான அங்கீகாரமும் மரியாதையும் இவர்களுக்கு திரும்ப வரவே வராது.நீ எனக்கு என்ன செய்தாய் என்று தான் இவர்களை பார்த்து கேட்பார்கள்.
இவர்கள் வாழும் வாழ்க்கையே வெறும் கடமைக்காகவும் மற்றும் கடனுக்காகவும் தான் இவர்கள் உயிர் வாழ்வார்கள்.என்னை விட்டு விடுங்கள் நான் எங்காவது கண்காணாத இடத்திற்கு சென்றுவிடுகிறேன். யாருடன் பழகுவதற்கும் ஒற்றுமையாக இருப்பதற்கும் எனக்குப் பிடிக்கவில்லை நான் தனிமையை விரும்புகின்றேன்,என்ற எண்ணம் இவர்களுக்கு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
இவர்களுக்கு இந்த ஜென்மம் பிறப்பு எடுக்கவே விருப்பம்இருந்திருக்காது. ஏதாவது ஒரு விஷயம் இவர்களுக்கு முன் ஜென்மத்தில் கடமையும் கடனும் இருந்திருக்கிறது அதனை அடைப்பதற்காகவே இவர்களுடைய ஆத்மா இந்த பூமிக்கு வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.
மேலும் இவர்களுக்கு தந்தை உயிருடன் இருக்கமாட்டார். மீறி இருந்தார் என்றால் இவர்களுக்கு உதவி செய்யாத நிலையில் இருப்பார்.அதாவது தந்தை எதுக்கும் பிரயோஜனம் இல்லாமல் வீட்டில் சும்மா இருப்பார். இல்லையென்றால் இவர்களின் தந்தை ஹிட்லர் போல நடந்து கொள்வார்.
இவர்களுக்கு தந்தை மூலம் கிடைக்கக்கூடிய சுகபோகம், தார்மீகம் பயன்கள் இவை அனைத்தும் இல்லாமல் இருக்கும்.தந்தையின் சொத்து, தந்தையுடைய அணுகூலம், தந்தையுடைய அனுசரிப்பு, தந்தையால் ஆதாயம், தந்தையால் உதவிகள்,இது அனைத்தும் இவர்களுக்கு அவ்வளவாக இருக்காது.
தந்தை உடைய சொத்தை அனுபவிக்க கூடிய பிராப்தம் கொடுப்பினை இவர்களுக்கு கிடையாது ஒன்று தந்தையுடைய சொத்து இருக்காது இருந்தாலும் இவர்களால் அந்த சொத்தை அனுபவிக்க முடியாது. மேலும் இவர்களின் வாழ்க்கையில் இவர்களின் தந்தை எடுக்கும் முடிவு என்றைக்குமே இவர்களுக்கு சாதகமாகவே முடியாது பாதகமாக தான் முடியும்.
தந்தை சொல்படி இவர்கள் எந்த ஒரு விஷயமும் செய்யக்கூடாது.
மீறி செய்தார்கள் என்றால் இவர்களின் வாழ்க்கையே கேள்விக் குறியாகி விடும்.தந்தையுடைய தொழிலை எக்காரணத்தைக் கொண்டும் இவர்கள் எடுத்து செய்யவே கூடாது மீறி தந்தையுடைய தொழிலை இவர்கள் எடுத்து செய்தார்கள் என்றால் அந்தத் தொழிலில் இவர்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும்.
தந்தை உடைய கடனை எக்காரணத்தைக் கொண்டும் இவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவே கூடாது மீறி பொறுப்பேற்றுக் கொண்டார்கள் என்றால் இவர்களிடம் இருக்கும் அனைத்து உடைமைகளையும் இழக்க நேரிடும். பிறகு அதன் மூலம் மிகப் பெரிய பிரச்சினைகளை இவர்கள் கண்டிப்பாக சந்திக்க நேரிடும்.
தந்தை மூலம் கடன் பிரச்சனை, தந்தை மூலம் அடிதடி சண்டைகள்,
தந்தை மூலம் தேவையில்லாத தர்மசங்கடங்கள், கோர்ட்டு கேசு இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கக் கூடியவர்கள் இவர்கள் தான்.
மேலும் இவர்களுக்கு உத்தியோகம் என்றைக்குமே சரி ஆகாது.இவர்கள் உத்தியோகத்தில் இருந்தார்கள் என்றால் இவர்களின் மேல் அதிகாரிகள் அதிகமாக இவர்களை வேலை வாங்குவது நயவஞ்சகம் செய்வது பழி தீர்ப்பது இவர்களை வைத்து அரசியல் செய்வது.இது போன்ற பிரச்சினைகள் கண்டிப்பாக இவர்களுக்கு உத்தியோகத்தில் இருக்கும்.
உத்தியோகத்தில் இவர்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இவர்களை முன்னேற விடமாட்டங்கள்.
தேவையில்லாத பலிகளை இவர்கள் மீது சுமத்திக் கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் உத்தியோகத்தை விட்டுவிட்டு இவர்களின் ஜாதகத்திற்கு தகுந்தவாறு தொழில் செய்தார்கள் என்றால் அந்தத் தொழிலில் இவர்களுக்கு கண்டிப்பாக மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும்.
இவர்களின் திறமை என்னவென்றால் அதிகாரம் செய்யக்கூடிய நிர்வாகம் கூடிய திறமைகள் இவர்களுக்கு மிக மிக அதிகம்.100 பேரைக் கூட இவர்களால் சரியாக வேலை வாங்க முடியும்.எத்தனை பேரை வேண்டுமானாலும் ஆளுமை செய்யும் அளவிற்கு சரியாக நிர்வாகம் செய்வார்கள்.இவர்களைப் போல மற்றவர்களை சரியாக வேலை வாங்குவதற்கு யாராலும் முடியாது.
10 நாட்களில் கூட்ட வேண்டிய கூட்டத்தை ஒரே நாளில்
அனைவரையும் ஒருங்கிணைக்கவும், கூட்டவும் இவர்களால் தான் முடியும்.இவர்கள் சின்னச் சின்ன வேலைகள் எல்லாம் செய்ய மாட்டார்கள்.ஒரு கூட்டத்தை ஒருங்கிணைப்பது அல்லது தலைமை தாங்குவது நிர்வாகம் செய்வது இது போன்ற வேலைகள் தான் இவர்களுக்கு செய்யப் பிடிக்கும்.
ஒரே நாளில் அல்லது ஒரே இரவில்
ஒரு விஷயத்தை அல்லது ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றால் இவர்களால் மட்டும் தான் சரியாக செய்ய முடியும்.இவர்களுக்கு இருக்கும் கெட்ட குணம் என்னவென்றால்,தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற குணமும், பிடித்த முயலுக்கு 3 கால் தான் என்று சொல்லக் கூடிய குணமும் இவர்களுக்கு அதிகம்.
யாராலும் இவர்களிடம் பேசி ஜெயிக்கவே முடியாது.அகங்காரம் ஆணவம்,பொறாமை குணங்கள், தான் பெரிய புத்திசாலி என்ற ஒரு நினைப்பும்,தான் சொல்வது தான் உண்மை மற்றவர் சொல்வதெல்லாம் பொய் என்ற ஒரு நினைப்பும்.
எப்பொழுதுமே இவர்கள் தங்களைப் பற்றியும் தங்களிடம் இருக்கும் பொருட்களைப் பற்றியும்,பெருமை பேசிக் கொண்டே இருப்பார்கள்.
இவர்களிடம் வாக்குவாதம் செய்து யாராலும் ஜெயிக்க முடியாது.
மற்றவர்கள் இவர்களிடம் பேசினார்கள் என்றால் ஏன் தான் பேசினோம் என்று வெறுத்து விடுவார்கள்.
அதே சமயம் லக்னத்தில் கேது மற்றும் லக்னாதிபதியுடன் கேது சேர்ந்து இருப்பவர்களுக்கு மருத்துவம் சார்ந்த விஷயங்களில் பிரச்சினைகள், விரயச் செலவுகள், பணக் கஷ்டங்கள் மிக அதிகமாக இருக்கும்.ஆங்கில மருத்துவ சிகிச்சைகள், இவர்களுக்கு பலன் தராது.லக்னத்தில் கேது மற்றும் லக்னாதிபதியுடன் கேது பகவான் சேர்ந்து இருப்பவர்களுக்கு இது போன்ற மருத்துவ சிகிச்சைகள் பலன் கொடுக்காது.
இது போன்ற மருத்துவ சிகிச்சைக்கு இவர்கள் சென்றார்கள் என்றால் இவர்களுக்கு செலவுகள் மிக அதிகமாகும். ஆங்கில மருத்துவம் மூலமாகவே பிரச்சனைகள், விரயச் செலவுகள் அதிகமாக ஏற்படும். மருத்துவரின் தவறான சிகிச்சை மூலமாக உடல் உபாதைகள் நோய்கள் பிரச்சனைகள் ஏற்படுவது இவர்களுக்குதீ தான் மிக முக்கியமாக ஏற்படும்.
யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் கேது பகவான் இருக்கின்றதோ அல்லது லக்கனாதிபதியுடன் கேது பகவான் சேர்ந்து இருக்கின்றதோ அவர்கள் இந்த பதிவில் சொல்லிருக்கக் கூடிய விஷயங்களை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகத் துல்லியமாக இருக்கும்.ஜாதகத்தில் இந்த சூட்சுமத்தை பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச்சரியாக இருக்கும்.
வழிபாடு:-
வனத்தில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலய வழிபாடு.சூரிய நமஸ்காரம், சூரியனுக்குரிய சிறப்பான ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவது, மலை மீது இருக்கக்கூடிய முருகரை தொடர்ந்து வழிபாடு செய்துவர அனைத்து நன்மைகளும் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது திண்ணம்.