5000 – கோடி சவால் விடுத்த ராமஜெயத்திடம் கேள்விகள் !? ஜி ஸ்கொயர் – சபரீசன் இணைப்பு !! மாப்பிள்ளை மாட்டிக்கொண்டாரா மக்கள் கேள்வி !!?
“தொடர்பே இல்லை” என்று கூறப்படும் நிலையில், Public Records-ல் தெரியும் Common Directorship & Partnership Links – Max Space Realty, Touch Feel Technologies, Look Up Merchandise, Lotus Horizon, Lotus Bhevin… எப்படி இணைகின்றன இந்த நிறுவனங்கள்? ராமஜெயம் , பிரசாந்த் ரெட்டி, சபரீசன், மோகன், கார்த்திக் என உருவாகும் Chain – பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்!
தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ₹5,000 கோடி சவால் விடுத்துள்ள G Square நிறுவனத்தின் இயக்குனர் ராமஜெயம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் வேதமூர்த்தி சபரீசன் ஆகியோருக்கு இடையே உள்ள Corporate Links பற்றிய ஆவணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கிடையே உள்ள தொடர்புகள் என்ன? யார் எந்த நிறுவனத்தில் Director அல்லது Partner ஆக இருக்கிறார்கள்? இந்த நிறுவனங்கள் ஒன்றோடொன்று எப்படி இணைகின்றன? என்பதுதான் தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்விகள்.
சபரீசன் – மோகன் கார்த்திக் இணைப்பு: முதல் Corporate Chain!
G Square Realtors நிறுவனத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் முதல் Corporate Chain, Max Space Realty LLP என்ற நிறுவனத்தில் தொடங்குகிறது. இந்த நிறுவனத்தில் வேதமூர்த்தி சபரீசன் மற்றும் அண்ணாநகர் மோகன் கார்த்திக் ஆகியோர் Designated Partners-ஆக இருப்பதாக Corporate Records குறிப்பிடுகின்றன.
இதைத் தொடர்ந்து,Touch Feel Technologies LLP என்ற நிறுவனத்திலும் இவர்கள் இருவரும் Partners-ஆக உள்ளனர். மேலும், Look Up Merchandise LLP என்ற நிறுவனத்தில் மோகன் கார்த்திக், சபரீசன் மற்றும் கார்த்திகேயன் சண்முகசுந்தரம் ஆகியோர் Partners-ஆக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ராமஜெயம் – சபரீசன் இணைப்பு: இரண்டாவது Corporate Chain!
இப்போது மற்றொரு முக்கியமான Corporate Link-ஐ பார்ப்போம். Lotus Horizon Developers LLP நிறுவனத்தில் G Square இயக்குனர் ராமஜெயம் மற்றும் பிரசாந்த் ரெட்டி தடிசினா ஆகியோர் Partners-ஆக குறிப்பிடப்பட்டுள்ளனர். அதே பிரசாந்த் ரெட்டி தடிசினா, Lotus Bhevin Developers LLP நிறுவனத்தில் வேதமூர்த்தி சபரீசன் உடன் Partners-ஆக இருப்பதாக Records தெரிவிக்கின்றன.
இதனால் ஒரு Chain உருவாகிறது:
ராமஜெயம் , பிரசாந்த் , ரெட்டி , சபரீசன் , மோகன் , கார்த்திக்.
மற்றொரு தொடர்பு: ஸ்ரீசித் – ராமஜெயம் – ஸ்ரீ கலா – கீதா மோகன் !
இதோடு இந்த Corporate Connections முடிந்துவிடவில்லை என்று கூறப்படுகிறது. Sreejith – Ramajayam – Sreekala – Geetha Mohan என்ற மற்றொரு தொடர்பும் முன்வைக்கப்படுகிறது. இதில் இந்த நபர்கள் எந்தெந்த நிறுவனங்களில் இணைந்திருக்கிறார்கள், எந்த நிறுவனத்தில் யார் Director? யார் Partner? எந்த நிறுவனங்களில் Common Ownership அல்லது Partnership Links இருக்கின்றன? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
முக்கிய கேள்வி: “தொடர்பே இல்லை” – ஆனால் Records என்ன சொல்கிறது?
இந்த நிறுவனங்களுக்கிடையே எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படும் நிலையில், Public Corporate Records-இல் காணப்படும் இந்த Common Directorship மற்றும் Partnership Links குறித்து தெளிவான விளக்கம் என்ன? என்பதுதான் தற்போது எழும் கேள்வி. Corporate Records-இல் ஒரே நிறுவனத்தில் இருப்பது அல்லது பல நிறுவனங்களில் Business தொடர்பு வைத்திருப்பது மட்டும் தவறு என்று கூற முடியாது. ஆனால், ஒரு தரப்பில் “தொடர்பே இல்லை” என்று கூறப்பட்டால், அதற்கு மாறாக Public Records-ல் தெரியும் இந்த நிறுவனத் தொடர்புகளுக்கு என்ன விளக்கம் என்பது பொதுமக்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகிறது.
போலீஸ் விஷன் புலனாய்வு !?
ரூபாய் 5,000 கோடி சவால் விடுத்துள்ள G Square இயக்குனர் ராமஜெயத்திடம் இப்போது ஒரு முக்கிய கேள்வி முன்வைக்கப்படுகிறது: “இந்த Corporate Links குறித்து நீங்கள் என்ன விளக்கம் சொல்கிறீர்கள்? இந்த நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று எப்படி தொடர்புடையவை?” பொது ஆவணங்களில் தெரியும் இந்த இணைப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், பல நிறுவனங்களில் மோகன் கார்த்திக் மற்றும் பிறருடன் இணைந்து செயல்படுவது, அவரது வணிக தொடர்புகள் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, G Square நிறுவனத்துடன் தொடர்புடைய ராமஜெயம், Lotus Horizon Developers LLP-ல் சபரீசனுடன் இணைந்து செயல்படும் பிரசாந்த் ரெட்டியுடன் இணைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
“தொடர்பே இல்லை” என்று கூறப்படும் நிலையில், Public Records-ல் தெரியும் இந்த Common Directorship & Partnership Links குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில், இது வெறும் வணிக தொடர்பா அல்லது அதற்கு பின்னால் வேறு ஏதேனும் உள்ளதா என்ற சந்தேகம் மேலும் வலுப்பெறும்.
G Square நிறுவனம் ஏற்கனவே பரந்தூர் விமான நிலைய நில மோசடி வழக்கில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்போது இந்த Corporate Links வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும்.
அடுத்த நகர்வு.
இந்த Corporate Links குறித்து சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அல்லது பிற விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்த விவகாரம், தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தும்.