ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் ஆலயமும் ., அதன் அற்புதங்களும் !!?

by ஆசிரியர்
Reading Mode

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் ஆலயமும் ., அதன் அற்புதங்களும் !!?

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயில் ஈரோட்டில் உள்ள வைணவத் திருத்தலம்.ஈரோடு மாவட்டத்தின் தலைநகரான ஈரோட்டில் பன்னீர் செல்வம் பூங்கா அருகில் 200மீட்டர் தூரத்தில் ஈஸ்வரன் கோவில் வீதியில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

கொங்கு நாட்டில் சோழர்களால் அமைக்கப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சரித்திரப் பெருமை கொண்ட திருக்கோயில்.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோயில், பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது.

துர்வாச முனிவர் தாம் திருமாலைக் கோபத்தில் அவமதித்த பிழைக்காக வருந்தி கடுந்தவமிருந்து மீண்ட பொழுது ’ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் வடிவில் அமைத்த திருக்கோயில்.

மூலவர், கஸ்தூரி ரங்கநாதர் ( மூவேந்தர் சதுர்வேதி மங்கலம் பள்ளி கொண்ட பெருமாள்)
உற்சவர், வரதராஜப் பெருமாள்,
தாயார் கமலவல்லி தாயார்.புராண பெயர் – கஸ்தூரி ரங்கபுரம்.
தல விருட்சம்: வில்வம்ஊர் : ஈரோடு கோட்டைப் பகுதி மாவட்டம் : ஈரோடு.
மாநிலம் : தமிழ்நாடு.

பழங்காலத்தில் கோட்டை என அழைக்கப்பட்டு பல சிற்றரசர்கள் வாழ்ந்து வந்த இப்பகுதி வரலாற்று சிறப்பு மிக்கது.
திருக்கோவில் மூலவராக ஸ்ரீ கஸ்தூரி பெருமாள் அருள்புரிய பள்ளி கொண்ட பிரமாண்ட நிலையில் ஸ்ரீ பெருமாளின் தரிசனம் மிக அழகானது. தெற்கு பார்த்த நிலையில் இத்திருக்கோவில் மூலவர் இருக்க திருக்கோவில் இராஜகோபுரம் அழகு நிறைந்த எழில் நயத்தோடு ரசிக்கக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் ஆண்டாள் சன்னதியும் தரிசிக்கவேண்டிய இடமாகும் .

ஸ்ரீ கமலவள்ளி தாயார் சன்னதி :

திருக்கோவில் பின்பகுதி பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . பங்குனி உத்திரதன்று சுவாமியுடன் 1 நாள் மட்டும் சிறப்பாக திருக்கல்யாணம் நடைபெறுகிறது.ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரிவர் மற்றும் ஸ்ரீ தன்வந்நிரி, ஸ்ரீ விஷ்வக்னேசர் சன்னதிகள் பார்த்து தரிசிக்க வேண்டிய இடமாகும் .ஸ்ரீசக்கரத்தாழ்வார் 16 கைகளுடன் தலையில் அக்னி விரிய காட்சி தருகிறார் . புரட்டாசி மாதம் தேர்திருவிழா விஷேசமானதாகும் .

திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீ ராமனுஜர் சன்னதி , ஸ்ரீ ஆழ்வார்கள் சன்னதி, ஸ்ரீ லிங்கப்பாறை ஆஞ்சனேயர் கல்வெட்டாக செதுக்கி அழகு மிளிர உள்ளார் .

தலவரலாறு :

கடவுளில் யார் சாந்தமானவர் என்பதை கண்டுபிடிக்க புறப்பட்ட துர்வாச முனிவர் தன் காலால் திருமாலின் மார்பில் உதைத்தார் . அவர் உதைத்ததை கண்டு கோபப்படாமல் சிரித்துக்கொண்டே அவரை வரவேற்றார் .
பக்தர்களின் பாதம்பட கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார் பெருமாள் . ஆனால் துர்வாச முனிவர் தன் கணவனின் மீது காலால் உதைத்ததை தாங்க முடியாத தாயார் பெருமாளை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார் .
ரிஷியே நீங்கள் செய்த காரியத்தால் என் தேவியார் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் , ரிஷிகள் எப்போதும் சாந்தமாக இருக்க வேண்டும் என்று பெருமாள் ரிஷியிடம் கூறினார் .முனிவரும் அதை ஏற்றார் . சாந்த குணத்துடன் துர்வாச முனிவரை இந்த தலத்தில் காணலாம் .

துர்வாச முனிவர் தாம் திருமாலைக் கோபத்தில் அவமதித்த பிழைக்காக வருந்தி கடுந்தவமிருந்து மீண்ட பொழுது ’ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் வடிவில் அமைத்த திருக்கோயில்.

இத்திருதலத்தில் பெருமாளின் காவலர்களாக ஜெயன் ,விஜயன் இருவரும் கருவறைக்கு உள்ளேயே தாழ்பணிந்து நிற்பதை காணலாம் . இது ஒரு சிறப்பான அம்சமாகும் .

ஸ்ரீ மகாலட்சுமி :

பிருகு மகரிஷியின் பெண்ணான திருமகள் இத்திருத்தலத்தில் தலவிருட்சமாக வில்வமர வடிவில் உள்ளார்.

கல்வெட்டுகள் :

இத்தலப்பெருமானுக்கு சேவை செய்யும் பெரியோர்களை ’ஸ்ரீவைஷ்ணவ கண்காணி செய்வார்’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
திருவேங்கடமுடையான் சந்நிதியின் நுழைவாயில் அமைத்தவர் தாயஞ்சாத்தன் எனும் செய்தி கி.பி.1265 ஆம் ஆண்டின் கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது. (மதுரை வீரபாண்டியன் காலம்)கல்வெட்டுகளில் ஈரோடு மூவேந்தர் சதுர்வேதிமங்கலம் என்றும் கஸ்தூரி ரங்கபுரம் என்றும் முன்பு வழங்கப்பட்டது தெரியவருகின்றது.

லிங்கப்பாறை ஆஞ்சநேயர்:

ஆஞ்சநேயர் பக்தரான வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் பிரகாரத்தில் இருக்கிறார். வலது கையை தூக்கி யிருக்கும் இவர் லிங்க வடிவ பாறையில் புடைப்புச் சிற்பமாக காட்சி அளிக்கிறார்.

மூலவரின் சிறப்புகள் :

திருக்கோவில் மூலவர்க்கு காவல் தெய்வமாக ஸ்ரீஜெயன்,ஸ்ரீ விஜயன் ஆகியோர் வீற்றிருக்க ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதரை தரிசிக்க கண் கோடி வேண்டும். பிரகாரத்தில் ஸ்ரீ கஷ்தூரி பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் வலதுகையில் தண்டம் தலைக்கு மேல் ஐந்து தலையுடன் ஆதிஷேசன் உடல் சுற்றி இருக்க ஸ்ரீ ஆஞ்சனேயர், ஸ்ரீ கருடாள்வார் உள்ளனர் .

ஆனி மாதத்தில் தைலக்காப்பு 48 நாள், சுவாமியின் முகம்,பாதம் அப்போது காண முடியும் . ஸ்ரீபெருமாளுக்குரிய நாளான ஏகாதசி, சனிக்கிழமை நாட்களில் திருக்கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு வந்து இறை வழிபாட்டை மேற்கொண்டு பல நலங்கள் பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் .

கல்வெட்டு செய்திகள்:

இக்கோயில் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது ஆதிஸ்தானத்தில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது . இக்கோயில் மூலவர் பள்ளிகொண்ட நாயனாருக்கு திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டியதேவர் மூவேந்திரசோழ சதுர்வேதிமங்கலத்தை வழங்கினார். மற்றொரு கல்வெட்டில் பெருமாளை பள்ளிகொண்டருளிய பெருமாள் என்றும், ஈரோடு பூந்துறை நாட்டு கஞ்சித்துண்டத்து ஈரோடு என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சோழ மன்னன் பராந்தக சோழன் (கொங்குப் பகுதி சோழர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தபோது) கதவு நிலைப்படியில் பொறித்த கல்வெட்டில், ஈரோடு “ஈரோடு” என்றும், மகா விஷ்ணு “பள்ளி கொண்ட ஆழ்வார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தக் கல்வெட்டு பின்வருமாறு கூறுகிறது…

ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொண்ட கோப்ரகேசரி பன்மற்கு யாண்டு பதினஞ்சாவது ஈரோட்டில் பள்ளிகொண்ட ஆழ்வார் கோயிலில் எங்கள் வெண்ணெய்க்கு கூத்தர்…..

கொண்டமல்லி வெங்கைய நாயக்கர் மற்றும் லக்காபுரம் முத்துக்குமார கவுண்டர் ஆகியோரின் மகன் சின்ன முராரி நாயக்கரால் கோயில் மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதாக மற்றொரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. மண்டபத்தின் இடதுபுற நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டுப் பலகை, பிரகாரத்தை அமைத்தது, அதாவது, மண்டி வெங்கட நாயக்கரின் மனைவி சின்னத்தாயம்மாள் (ஈ.வே.ரா. பெரியார் – திராவிடக் கழகத் தலைவரும், இந்துக் கடவுள்களை வழிபடுவதை எதிர்த்தவருமான ) கடப்பாக் கல்லால் சுற்றும் பாதை பற்றிப் பேசுகிறது. அன்பளிப்புத் தொகை அவர்களின் சேமிப்பிலிருந்து “சிறுவாட்டுப் பணம்”, அதாவது மளிகைப் பொருட்களை வாங்குவதற்கான மீதிப்பணம் நீண்ட காலத்திற்கு சேமிக்கப்படுகிறது.

அமைவிடம்:

இந்தக்கோயில் ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.
ஈரோடு ரயில் சந்திப்பிலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவிலும், ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பெரிய மாரியம்மன் கோவிலிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00