பூஜை அறையில் வழிபாடு செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய சம்பிரதாயங்கள் !??

by ஆசிரியர்
Reading Mode

பூஜை அறையில் வழிபாடு செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய சம்பிரதாயங்கள் !??

சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது சரியானதல்ல.

வீட்டில் கடவுளை வணங்கும் போது நின்றவாறே தொழுவாமல் அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

ஈரமான உடையுடனும், ஓராடையுடனும், தலைக்குடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

பூஜையின் போது விபூதியை நீரில் குழைத்துப் பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்துப் பூசலாம்.

காலை, மாலை வேளைகளில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும் போது விளக்கேற்றக் கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராகத் தேங்காய் உடைக்கக் கூடாது.

கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவது தான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கிரகம் நிறைந்திருக்கும்.

வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

விளக்கை ஏற்றும்போது, வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவைச் சாத்தி விட வேண்டும்.

விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியைத் தூண்டுதோ கூடாது.

தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர, திரி அல்ல, திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

வீட்டில் பூஜை அறையில் தெய்வப்படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தைச் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்து வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.

பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்

சனி பகவானை வேண்டும் பொழுது ஒரு போதும் வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00