சூரியன் சுக்கிரன் இணைவும், அதனால் ஏற்படும் திருமண தடைகளும்?

by ஆசிரியர்
Reading Mode

சூரியன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் இணையும்போது, சில நேரங்களில் சுக்ராதித்ய யோகம் உருவாகிறது. இது ஒரு நல்ல யோகமாகக் கருதப்படுகிறது. இந்த யோகம் ஒருவரது ஜாதகத்தில் இருந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம், புகழ் மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றைப் பெறுவார்கள் என்று சொல்லப் படுகிறது.சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையின் பலன்கள் அவரவர் ஜெனன ஜாதகத்தில் எந்த பாவத்தில் உள்ளது என்பதை பொறுத்தே அமைகிறது.இருந்த போதிலும் திருமண வாழ்க்கையில் சில சிக்கலை உண்டு பண்ணவே செய்கிறது.

சூரியன், சுக்கிரன் தொடர்பும், திருமண தடைகளும்? சூரியன் மற்றும் சுக்கிரன் இருவரும் இணைந்து ஆண் ஜாதகத்தில் 1-2-7-8-12-ல் நின்றால் களத்திர தோஷம் ஆகும்.
பெண் ஜாதகத்தில் எங்கு நின்றாலும் களத்திர தோஷமாகும்.

சூரியனை பிரிந்து சுக்கிரன் 46 ° பாகை அல்லது எத்தனை பாகைகள் வித்தியாசத்தில் முன் சென்று நின்றாலும் திருமணத் தடைகளை உண்டாக்காது.சூரியனை விட சுக்கிரன் 43 ° பாகைகளுக்கு மேல் பின் தங்கி நின்றால் மட்டுமே திருமணத் தடைகளை உண்டாக்கும்.

குறிப்பு : –

ஜோதிட பலன்கள் அவரவர் ஜாதக கட்டத்தைப் பொறுத்து மாறுபடும். எனவே, சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்பதை அறிய, ஒரு சிறந்த ஜோதிடரை அணுகுவது நல்லது. 

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00