தாய்லாந்து ஆற்றின் பாறை படுகையில் பள்ளிகொண்ட திருமால் புடைப்புச் சிற்பம் !!

தாய்லாந்தின் உபோன் ராட்சத்தானி மாகாணத்தில், லாம் டோம் யாய் ஆற்றின் பாறைப் படுகையில் செதுக்கப்பட்டுள்ள “பிர நாராய் பந்தோம் சின்” (பாற்கடலில் பள்ளிகொண்ட திருமால்) புடைப்புச் சிற்பம்
நாட்டிலேயே அறியப்பட்ட ஒரே நீருக்கடிப் புடைப்புச் சிற்பமாகும்.
10–11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த அரிய கலைப்படைப்பு, மூன்று தலைகளைக் கொண்ட ஆனந்த சேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் திருமாலைச் சித்தரிக்கிறது.

முதன்முதலில் 1979ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்தத் தலம், அண்மையில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தாய்லாந்து இராணுவத்தினரால் மீண்டும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பண்டைய காலத்தில் வளமை, செழிப்பு மற்றும் புனித நீருடன் தொடர்புடைய வழிபாட்டுத் தலமாக இது இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்த இந்தப் புடைப்புச் சிற்பம் நம் பாரத நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.