கண்ணில் விழுந்த தூசியாய், சிலர் செய்துவிட்டுப் போன செயல்கள் மனதில் இன்னும் உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது..!
நாம் கடந்து வந்த மனிதர்களில் எல்லோரும் ஏதாவது படிப்பினையைக் கற்றுத் தந்தவர்கள் தான்..ஆனால் அவர்கள் கற்றுக் கொடுத்த பாடங்களுக்கு, நமது ஆழமான அன்பையும் அசைக்க முடியாத நம்பிக்கையையுமே…குரு தட்சணையாக வாங்கியிருக்கிறார்கள்..!!
நம்மால் முடியும் என்று நினைத்து துணிந்து செய்த காரியங்களே பெரும்பாலும் வெற்றி நடை போட்டிருக்கிறது.தன்னம்பிக்கை இல்லாது செய்த காரியங்களே தோல்வியை தழுவி இருக்கிறது….
ரசிக்கத் தெரிந்தால் கருப்பு கூட அழகு தான்..சிரிக்கத் தெரிந்தால் வெறுப்பு கூட அன்பு தான்……..!! நிராகரிப்பு என்பது நிரந்தரமல்ல……..
உன் தரம் உயரும் போது உன்னை கொண்டாடும் உலகம் இது..!!
வசதி வந்து விட்ட உறவுகள் ஒரு விசித்திர கண்ணாடி……
நாம் முகத்தைக் காட்டினால் அவை முதுகைக் காட்டும்………..!!
வாழ்க்கையில் இரண்டே இரண்டு விஷயங்களை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்ங்க………ஒன்னு… வெற்றியைத் தேடி ஓடணும்…இரண்டு…தோல்வியை மனதில் இருந்து ஓட்டணும்..!
ஆயிரம் குட்டு பட்டாலும்……..
அடிப்படை குணம் அப்படியே தானிருக்கும்.!!தேடுவதற்கும் திட்டுவதற்கும் ஒரு பெண் உண்மையான அன்புடன் இருக்கும் வரை தான்…………ஒரு ஆண் சரியாக இருப்பான் ……….!!வாழ்க்கையில் கிடைக்கும் சி்ன்ன மகிழ்வையும் பெரிதாகக் கொண்டாட முடியுமாயின்.. ….
நம்மை எதிர் நோக்கும் பெரும் துயரெல்லாம் அற்பமாகவே தோன்றும்..!!குடும்பத்தோட உட்கார்ந்து பேசினாலே போதும்……….உடம்பு சரியில்லைன்னு மருத்துவமனைக்
கும்..மனசு சரியில்லைன்னு ஜோசியக்காரர்கிட்டேயும்..
பொண்டாட்டி சரியில்லைன்னு கோர்ட்டுக்கும்…..புள்ளைங்க சரியில்லைன்னு ரோட்டுக்கும் போக வேண்டியதில்லை.வானமே எல்லை என்று இருந்து விடாதே,வானத்திற்கு அப்பாலும் வசப்படுகின்ற உலகம் ஒன்று உண்டு…
காயத்தை எப்படியோ
சரிசெய்து விடுகிறார்கள்
அதன் தழும்புகள் தான்
அழியாமல் அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றன.
ஆளுக்கொரு வேசம்! நேரத்திற்கொரு பேச்சு! என்றிருப்பவர்கள்
தான் வாழ்க்கையை மிக எளிதாக எதிர்கொள்கிறார்கள்.படித்த நல்லவற்றை பிரதிபலிக்காமல்
படித்துக்கொண்டே இருப்பது,
ஜீரணிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே
இருப்பதைப் போன்றது.