பித்ரு சாபம் நீங்க எளிய வழி !? தர்ப்பணம் செஞ்சாச்சு பித்ரு சாபம் நீங்கியதா !!? கிடையாது!!!? ஏன் !?

by ஆசிரியர்
Reading Mode

பித்ரு சாபம் நீங்க எளிய வழி !? தர்ப்பணம் செஞ்சாச்சு பித்ரு சாபம் நீங்கியதா !!? கிடையாது!!!?இறை நம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே கவனிக்கவும் மற்றவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.

பித்ரு சாபம் நீங்க காசி, ராமேஸ்வரம், கயா, ஸ்ரீரங்கம், கொடுமுடி பவானி இப்படி ஆயிரம் இடங்கள் உள்ளது எங்கு வேண்டுமானாலும் நாம் தர்ப்பணம் செய்யலாம் பித்ரு சாபம் நீங்கும்.

சரி தர்ப்பணம் செஞ்சாச்சு பித்ரு சாபம் நீங்கியதா…???

கண்டிப்பாக கிடையாது.

ஒரு ஜோசியர் ஒரு ஆன்மீகவாதி சொல்லி நீங்கள் பித்ரு சாபம் செய்வதால் மட்டுமே உங்களுக்கு எதுவும் நிவர்த்தியாக போவதில்லை.

உன் தாய் தகப்பன் உயிரோடு இருக்கும் வரை அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் இதுதான் முதல் தரமான முதல் உண்மை.

தாய் தகப்பன் இல்லாத காலத்தில் மாதம் தோறும் அமாவாசை தர்ப்பணம் அல்லது படையல் போட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

தேவர்களுக்கு ஒரு வருடம் என்பது ஒரு நாள் என்பது விதி இது அனைவரும் அறிந்தது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் அன்றைய தினம் நம் ஒரு நாள் உணவளிக்கிறோம் பிரச்சனை இல்லை தேவர்களுக்கு. ஆயுத பூஜை அன்று சரஸ்வதிக்கு உணவளிக்கிறோம் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உணவளிக்கிறோம் தைப்பூசம் பங்குனி உத்திரம் முருகனுக்கு உணவளிக்கிறோம். இப்படி ஏதேனும் ஒரு நாளில் கண்டிப்பாக நாம் அளிக்கும் உணவு தேவர்களுக்கு போய் சேரும் இதுவே தேவ கடன் ஆகும்.

சரி நம்ம காசி ராமேஸ்வரம் போயிட்டு வந்துட்டோம். எதுவுமே கிடையாது நமக்கு பித்ரு சாபம் நீங்கி விட்டது பிறகு எதற்கு அமாவாசை விரதம் இருக்க வேண்டும். பெரும்பாலானோர் எண்ணம் இப்படி தான் உள்ளது. தேவர்களுக்கு தட்சிணாயண உத்தராயணம் பகல் இரவு ஒரு நாள் என்பது போல வளர்பிறை தேய்பிறை இவை இரண்டும் இரவு பகலாக பித்துருக்களுக்கு ஒரு நாள் ஆகும். இப்படி மாதம் தோறும் அதாவது அவர்களுக்கு ஒரு நாளைக்கு உணவளிக்க வேண்டும். ராமேஸ்வரம் போய்ட்டு வந்துட்டேன் ஸ்ரீரங்கம் போயிட்டு வந்துட்டேன் காசி போயிட்டு வந்துட்டேன் இப்படி புகழ் பாடுபவர்கள் மாதந்தோறும் அமாவாசை விரதம் இல்லை என்றால் நீங்கள் எங்கு போய் வழிபாடு செய்தாலும் புண்ணியம் இல்லை. முறையாக அமாவாசை தர்ப்பணம் அல்லது படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டும். இதைத்தான் பித்ரு கடன் என்கிறோம்.

இதெல்லாம் ஒன்னு கூட செய்ய மாட்டேன் ஆனால் ஜாதகத்துல சூரியனோட ராகு சேந்துருச்சு சந்திரனோட கேது சேர்ந்திருச்சு சனி ஐந்தாம் இடத்தை பார்வை செய்கிறார் நமக்கு பித்ரு சாபம் உள்ளது அது உள்ளது இது உள்ளது அதெல்லாம் வேஸ்ட். இதெல்லாம் இருப்பது தெரியும் அல்லவா.. பிறகு எதற்கு உங்கள் மனம் குறுகுறுக்கிறது அமாவாசை விரதம் இருக்க… கேட்டா சொல்வது எங்க அப்பா எனக்கு ஒண்ணுமே செய்யல அவருக்கு நான் என்னத்துக்கு நான் அமாவாசை விரதம் இருக்க வேண்டும் என்று. இதைத்தான் நாளை உன் மகனும் செய்வான். அப்புறம் குத்துதே குடையுதே என்று மறுபடியும் ஜாதக நோட்டை எடுத்துக் கொண்டு ஜோதிடர்களிடம் வருவது… தக்க தசா புத்திக்கு உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைத்தே தீரும் உலகம் யாவும் தசா புத்தி அடிப்படையில் நவகிரகங்கள் வழியில் பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நம்ம ஆளுங்க சொல்லுவாங்க பாருங்க நான் காசியில் போய் தர்ப்பணம் பண்ணி வந்து விட்டேன். அதெல்லாம் இருக்கட்டும் போன மாசம் அமாவாசை விரதம் இருந்தியா.. இல்லை என்பார். தசா புத்தி வச்சு செய்யும். உதாரணமாக சந்திரன் கேது இணைந்து ig வாழ்ந்தவரும் உண்டு வீழ்ந்தவரும் உண்டு. தன்னுடைய கடமைகளை செய்பவர்களே தப்பித்துக் கொள்கிறார்கள்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00