தேவர் யார் தெரியுமா.? ஒரே ஒரு வரி தான்… தரமான சம்பவம் செய்த முதல்வர் விஜய்… கடந்த சில நாட்களாக சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை சாதிய தலைவராக சித்தரிக்க முயற்சித்த ஒரு தரப்புக்கு, தமிழகத்தின் முதல்வரின் தேவர் குருபூஜைக்கான வாழ்த்து செய்தியில் இடம்பெற்ற வாக்கியங்கள் சம்மட்டி அடியாக அமைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை முதல்வராக இருந்த அனைவருமே தேவர் குருபூஜை அன்று பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.
இம்முறை முதல்வர் விஜய் பசும்பொன் சென்று தேவர் குருபூஜையில் கலந்து கொள்வார் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் முதல்வர் விஜய் பசும்பொன் செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தேவர் குருபூஜைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே, ஒரு தரப்பினர் சமூக வலைதளத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை சாதிய தலைவராக சித்தரித்து, தேவர் குரு பூஜை நிகழ்வில் கலந்து கொள்ள கூடாது என பதிவு செய்தனர்.
மேலும் பாதுகாப்பு காரணங்களால் பசும்பொன் செல்வதை முதல்வர் தவிர்த்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாதிய தலைவர் , அதனால் தான் முதல்வர் விஜய் , குருபூஜையை கலந்து கொள்ள வில்லை, என தேவரை தெய்வமாக வணங்கும் தென் மாவட்ட மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி இருக்கும் தேவர் பக்தர்களுக்கு எதிராக விஜயை திசை திருப்பும் வகையில் ஒரு குறிப்பிட்ட தரப்பு சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்தது.
இந்த பரபரப்புக்கு மத்தியில், சென்னை நந்தனத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு தேவர் குரு பூஜை அன்று முதல்வர் விஜய் மரியாதை செலுத்த இருக்கிறார் என்கிற செய்தி வெளியானதும், மீண்டும் அந்த குறிப்பிட சிலர் சமூக வலைதளத்தில் கதற தொடங்கியது. இந்த சலசலப்புக்கு மத்தியில் சென்னை நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தினார்.
அந்த வகையில் தேவர் குருபூஜை தமிழகம் முழுவதும் கொண்டாட பட்டாலும் கூட, பசும்பொன் மற்றும் மதுரை கோரிப்பாளையம் ஆகிய இரண்டு பகுதியில் சித்திரை திருவிழா போன்று தென் தமிழகம் மக்கள் கொண்டாடி வருவார்கள், ஆனால் இம்முறை சென்னை நந்தனத்தை திருவிழா கோலாக மாற்றி இருக்கிறது முதல்வர் விஜய் அங்கே சென்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வணங்கி மரியாதை செலுத்தியது.
நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்திய பின்பு தேவர் குருபூஜை க்கான முதல்வரின் வாழ்த்து செய்தியில், தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன் என தெரிவித்த முதல்வர் விஜய்.
மேலும் வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார் என குறிப்பிட்ட முதல்வர் விஜய்.
மேலும் சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என தெரிவித்து இறுதியில் சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த என சுட்டி காட்டி முதல்வர் விஜய் தெரிவித்துள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரை சாதிய தலைவராக சித்தரிக்க முயற்சித்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுப்பது போன்று அமைந்துள்ளது.