12
Reading Mode
வள்ளலார் பிறந்த தின வாழ்த்து’பா!
ஞானநதி!
அன்பினால் இங்கு யாவும் சாத்தியம் என்றுரைத்த பேரருளின் திருவுருவே..
மாந்தர்கள் மேதினில் பயனுற மண்வந்த
சிவமே..
மாசற்ற ஒளியே.. பேசும் எங்கள்
வேதமே.
பிள்ளை வயதில் பெரும் ஞானம் சொன்ன செந்தமிழ் பெட்டகமே.
எங்கள் பேரன்பின் குருவே.
உயிர் கொண்டு வந்ததெல்லாம் உயர்ந்தது. மத்தெல்லாம் மண்மூடி போக கடவது,
அன்பினால் அறம் கொண்டே நாம் வாழ்வோம் என்று சொன்ன தமிழ் மறையே..
பூமியை புனிதமாக்க வந்த ஞான நதியே.
இந் நன்னாளில் உமது பாதங்களில் பணிந்து வாழ்த்துகிறோம்.
உம் தயவு உயிருள்ளவரை வேணும் ஐயா. நற்றமிழே..வாழியவே வாழியவே.
கவி ராஜவர்த்தனன் ….
Customize Text:
Font Color: