உலகப் புகழ் –  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா அமர்க்களம் !!?

by ஆசிரியர்
Reading Mode

உலகப் புகழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா அமர்க்களம் !!?மதுரை – உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்குப் பெருவிழா (செப்.17) வெகு விமரிசையாக நடைபெற்றது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் குடமுழுக்கு விழா 2009ஆம் ஆண்டுக்கு பிறகு (17 ஆண்டுகளுக்கு பின்) காலை 7.40 மணி முதல் 8.10 மணி கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வடக்கு ஆடி வீதியில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 174 குண்டங்களில் யாக வேள்விகள் 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டன. விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கிய குடமுழுக்கு விழாவானது கடந்த 11ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை துவங்கி ஆவணி மாதம் வியாழக்கிழமை (17/09/2026) அதிகாலை பன்னிரண்டாம் கால யாக சாலை பூஜைகள் வரை நடைபெற்றன.

தொடர்ந்து, யாகசாலையில் வைக்கபட்ட புனித நீர் கலசங்கள் புறப்பாடாகி, முதலில் தங்க விமானங்கள் மற்றும் ராஜ கோபுரங்களுக்கு (17/09/2026) காலை 07:40 மணிக்கும், மூலவர் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு 07:55 மணிக்கும், மூலவர் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு 08:10 மணிக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.

கோயிலை சுற்றி திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகூப்பி, மதுரை மீனாட்சி அம்மனை வணங்கினர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பக்தர்களுக்கான ஏற்பாடுகள் .

பக்தர்களின் வசதிக்காக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் குடிநீர் தொட்டிகள், வெயிலின் தாக்கத்தை குறைக்க தரைப்பகுதியில் தேங்காய் நார் விரிப்புகள், நிரந்தர மற்றும் தற்காலிக கழிப்பறைகள், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள், சுழற்சி முறையில் தூய்மை பணியாளர்கள் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

குடமுழுக்கு நிகழ்வை ஒட்டி பக்தர்கள் நான்கு ஆவணி மூல வீதிகள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்ட அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது திருக்குட நன்னீராட்டு பெருவிழா நிறைவு பெற்ற நிலையில், மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே பக்தர்கள் சென்று வழிபாடு செய்வதற்கு ஏதுவாக காலை 10 மணி முதல் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், இன்று முதல் 20ஆம் தேதி வரை பொதுமக்கள், பக்தர்கள் கட்டணமின்றி மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

குடமுழுக்கை நேரில் காண பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு பல்வேறு வண்ணங்களில் பாஸ் மற்றும் பேட்ஜ்கள் வழங்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும், மாநகரை சுற்றி சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நகர் முழுவதும் 53 இடங்களில் மிகப் பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு நிகழ்வுகள் நேரலையில் காட்சிப்படுத்தப்பட்டன.

50 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து !!

திருக்குட நன்னீராட்டு விழாவில் கலந்துகொண்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் அன்னதான விருந்து வழங்கப்பட்டது. இப்பணியில் 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

குடமுழுக்கு பெருவிழாவுக்காக சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரைக்கு வருகை தர 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகள், தகவல் மற்றும் அவசர உதவிகளுக்காக 1800-425-6781, 1800-425-6782 ஆகிய கட்டணமில்லா உதவி எண்கள் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் கண்ணியத்துடன் கடமை உணர்வோடு அவர்களின் பணியை செவ்வனே செய்து பொது மக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி சிறப்பான முறையில் பணியாற்றி கொண்டிருக்கின்றனர் என்பதால் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00