இன்ஸ்டாகிராமில் வேலைக்கு வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு ! தொழிலதிபர் கைது !!?
இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி வேலைக்கு சேர்ந்தஇளம் பெண்ணுக்கு பாலியல்
தொந்தரவு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கைது
திங்கள் சந்தை அருகே குளச்சல் ரோட்டில் ஒரு பர்னிச்சர் கடை உள்ளது. இந்த கடையில் வேலை வாய்ப்பு இருப்பதாக விளம்பரங்கள் போடப்பட்டது. இதை பார்த்த அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண் கடந்த 31ஆம் தேதி வேலைக்கு சேர்ந்தார்.
அவருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்குவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இளம் பெண் வழக்கம் போல கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததார். அப்போது கடை உரிமையாளர் ரிக்சன் மனோ ஜோஸ் (வயது 53) இளம் பெண்ணிடம் எனக்கு அவ்வப்போது தாய்லாந்து மசாஜ் செய்தால் மாத சம்பளம் ரூ.17 ஆயிரம் ஆக உயர்த்தி தருவதாக கூறினாராம். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அவரிடம் எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியே சென்று விட்டார்.
நடந்த சம்பவத்தை வீட்டில் உள்ளவர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மகளுடன் சென்று இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இரணியல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் வழக்கு பதிவு செய்தார்.
இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் விசாரணை நடத்தி ரிக்சன் மனோ ஜோஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்தால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.