அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்..
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடை பாதையில் சிறிய அளவில் கடை வைத்திருக்கும் பெண்களிடம் மாமூல் வசூல் செய்யும் தவெக நிர்வாகிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமைகள், பட்டப்பகலில் கொலை, கொள்ளை என தொடர்ந்து அடுக்கடுக்காக பல குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.


தவெக-வினரும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலையில், தவெக தலைமை அதனை கண்டும் காணாததுமாய் இருந்து வருகிறது.
அதோடு தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஊழல்,லஞ்சம் உள்ளிட்டவற்றை ஒழிப்பேன் என்று சொல்லிய விஜய் கட்சியில், பலரும் லஞ்சம் பெரும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதுமட்டுமின்றி தவெக பொறுப்பேற்றது முதல் லஞ்சம் இருக்காது, யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை என்றும் தூய்மையான ஆட்சி நடத்துவதாகவும் அக்கட்சியின் அமைச்சர்கள் பேசி வருகிறார்கள்.
இது போன்று கட்சிக்கு அவப்பெயர்களை உண்டு பண்ணும் விதமாக நடக்கும் கயவர்களை உடனடியாக கண்டுபிடித்து கட்சி தலைமையகம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.