விடியல் ஆட்சியில்,வெளிச்சம் இல்லா ஆலயம்!  கண்டுகொள்ளாத அறநிலையத்துறை!!வெளிச்சமில்லா ஆலயம் விடிவு காலம் பெறுவது எப்போது???

by ஆசிரியர்
Reading Mode

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் பகுதியில் புகழ் பெற்ற, பழமை வாய்ந்த பழூர் நவகிரக ஸ்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் தாமரை குளத்தைச் சுற்றி வெளிச்சம் இல்லாததால் இருள் சூழ்ந்துள்ளது. இவ்விடத்தில் மின் விளக்குகள் அமைப்பதற்கு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு கொடுத்துள்ள நிலையில் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல் இந்து சமய அறநிலையத்துறை   தூங்கிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆலயத்தின் செயல் அலுவலரை தொடர்பு கொண்ட போது சம்பந்தமில்லாத பதில்களையே கூறிக் கொண்டிருக்கிறார். பொருத்தம் இல்லாத பதிலையும், பொறுப்பற்ற பேச்சையும் பேசிக் கொண்டிருக்கிறார் திருக்கோவில் செயல் அலுவலர்.

எப்போது கேட்டாலும் போதுமான வெளிச்சம் உள்ளது என்றும், கோயிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றும், மின் விளக்குகள் அமைப்பதற்கு ஊராட்சி     ஒன்றியத்திற்கு விண்ணப்பித்துள்ளோம் என்றும், இறுதியாக யாருமே எதிர்பார்க்காத பதிலாக   குளத்திற்கு   வேலி அமைக்கப்படும்    என்றும் பதிலளித்துள்ளார்.

திருக்கோவிலில் வெளிச்சம் இல்லாத இடத்திற்கு விளக்குகள் அமைக்க பேசினால் குளத்திற்கு வேலி அமைக்கும் கதையை சம்பந்தமே இல்லாமல் பேசி காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார் ஆலயத்தின் செயல் அலுவலர்.   இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்   கீழ்    இருக்கும் புகழ்பெற்ற பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலுக்கு மின்விளக்கு பொருத்துவதற்கு கோவிலின் பாதுகாப்பிற்கு பாரபட்சம் காட்டுவது ஏன்? என்பது திருச்சிராப்பள்ளி இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையருக்கே வெளிச்சம் …

திருக்கோவிலின் உரிமையாளராகவே செயல்படும் செயல் அலுவலர் மீது நடவடிக்கை பாயுமா என சமூக ஆர்வலர்களின் ஆதங்கமான வேதனை மிக்க கேள்வியாக உள்ளது.

உலகத்திற்கே ஒலி கொடுத்து இந்த பூமியை இரட்சிக்கும் நவகிரக ஆலயத்திற்கு வெளிச்சத்தை கொடுக்குமா இந்த அரசு!??? விடியல் ஆட்சியில் வெளிச்சம் கிடைக்குமா??என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!!!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00