சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்க ஆஞ்சநேயரை வழிபட வாரீர்!!
புரட்டாசி மாதம் 05ஆம் நாள் 21/09/2025 ஆதி வாரம் ஞாயிறு மஹாளய அமாவாசை அன்று
புத்திகூர்மை அதிகரிக்க நம்மை பிடித்திருக்கும் கிரக தோஷங்கள் நீங்கி
ஆன்ம பலம், மனபலம், உடல் பலம்,
பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் பெற்றிட , மனக்கவலை நீங்கி
தைரியம் அடைந்து எடுத்தகாரியத்தில் வெற்றி அடைந்திட
சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்க, அஞ்சனை புத்திரன் வாயு பகவான் குமாரன் அனுமந்த வீரன் ஆஞ்சநேயரை துளசி சாத்தி வழிபடுவோம் வாரீர்
அஞ்சனை மைந்தனே, அமாவாசையில் பிறந்தவனே, அவதார புருஷனே, ஆஞ்சநேய ஸ்வாமியே போற்றி! போற்றி!!
ஆனந்த வடிவே, அரக்கன் ராவணனின் அசோகவனம் எரித்தவனே, இன்னல் களைபவனே ஆஞ்சநேயா போற்றி! போற்றி!!
இசை ஞானியே, இவ்வுலகில் ராம நாமம் ஜபிக்க படும் இடத்தில தோன்றுபவனே ராம தூதனே போற்றி! போற்றி!!
கரை காணா கடல் தாவியவனே, துதிக்கும் அடியவரை பிறவி கடலில் கரை சேர்ப்பவனே கர்மயோகியே போற்றி! போற்றி!!
சஞ்சீவினி மலை கொணர்ந்து காத்தவனே, சிந்தூரம் பூசியவனே, சீதையின் துக்கம் போக்கியவனே சிரஞ்சீவியே
சொல்லின் செல்வனே, சோக நாசகனே, சூரியனின் சீடனே, பண்டிதனே, பஞ்சமுகனே, பயம் அறியாதவனே போற்றி! போற்றி!!
மார்கழியில் மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவனே, மதி மந்திரியே, மனோவேகனே, மாருதியே போற்றி! போற்றி!!
வாயுகுமாரனே, லங்கா தகனனே, ருத்ர வடிவனே, வடைமாலைப் பிரியனே, வெற்றிலைமாலை ஏற்பவனே, போற்றி! போற்றி!!
1 comment
அதிக விளம்பரம் இல்லாத நிலையில் மக்கள் பலரும் கவனிக்கும் நிறுவனத்தை வாழ்த்த வயதில்லை
காவல் துறை பற்றிய கட்டுரை தகவல் அருமை….. வாழ்த்துக்கள்