மயானம் என்பது இறந்தவர்களை அடக்கம் செய்யும் அல்லது தகனம் செய்யும் இடமாகும். இதை சுடுகாடு,இடுகாடு என்றும் கூறுவர். இது பொதுவாக மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும். ஆனால் இன்றைய காலத்தில் காலச் சூழ்நிலையால் மயானம் அருகிலேயே குடியிருக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது அப்படிப்பட்டவர்கள் என்ன செய்வது என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்
மயானத்திற்கு அருகாமையில் குடியிருக்கும் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி மயானத்தில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்கள் வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
இதற்கான ஒரு அற்புதமான, எளிமையான பரிகாரம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு ஓம் ரம் அக்னி தேவாய, சர்வ தோஷம் நிவாரய நிவாரய என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும். இப்படி செய்து வந்தால் அதில் ஏற்படும் குற்றங்கள் மறைந்து, தோஷங்கள் தாக்கா வண்ணம் சிறப்பாக வாழலாம்.
1 comment
This piece of writing presents clear idea designed for the new visitors of blogging, that truly how to do blogging.