தை கிருத்திகையில் கந்தனை வழிபட்டால் கவலைகள் மறைந்து இன்பம் கூடும் !!?

by ஆசிரியர்
Reading Mode

தை கிருத்திகையில் கந்தனை வழிபட்டால் கவலைகள் மறைந்து இன்பம் கூடும் !!?

தை மாதம் 13ஆம் நாள் (27/01/2026) செவ்வாய் கிழமை கிருத்திகை நட்சத்திர வழிபாடு சிறப்பு.

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன்.

ஆண்டுக்கு மூன்று கிருத்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன. அவை,

உத்தராயண துவக்கமான தை மாத தை கிருத்திகை,

கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கிருத்திகை,

தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

இந்த மூன்று கிருத்திகை முருகனுக்கு மிக உகந்த நாட்கள் ஆகும்.

தை மாத கிருத்திகை அன்று பல முருகன் ஸ்தலங்களில் மக்கள் தங்களின் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தி வருகின்றனர்.

தை கிருத்திகையின் மகிமைகள் :

பிள்ளைச் செல்வம் வேண்டுபவர்கள், தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்கள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களுக்கு கட்டாயம் குழந்தை பிறக்கும். எனவேதான் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் வாழ்வியல் பழமொழி வந்துள்ளது.

ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம் என்பதால், செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, மனை, சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள்,
உள்ளவர்கள் இந்த தை கிருத்திகை தினத்தில் கார்த்திகேயனை வணங்கினால் வந்த வினையும், வருகின்ற வினைகளும் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெறுவர்.

தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும்!”.

தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00