அனுமனை வழிபட்டு எடுத்தகாரியம் வெற்றி அடைய இப்படி வழிபாடு செய்யுங்கள் !??

by ஆசிரியர்
Reading Mode

அனுமனை வழிபட்டு மனக்கவலை நீங்கி தைரியம் அடைந்து எடுத்தகாரியத்தில் வெற்றி அடைந்திட!??

புத்திகூர்மை அதிகரிக்க நம்மை பிடித்திருக்கும் கிரக தோஷங்கள் நீங்கி ஆன்ம பலம், மனபலம், உடல் பலம்,

பிராணபலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் பெற்றிட, மனக்கவலை நீங்கி தைரியம் அடைந்து எடுத்த காரியத்தில் வெற்றி அடைந்திட,

அஞ்சனை புத்திரன் வாயு குமாரன் அனுமந்த வீரன் ஆஞ்சநேயரை துளசி சாத்தி வழிபடுவோம் வாரீர்.

அஞ்சனை மைந்தா , அஞ்சுதல் வென்றாய் , அஞ்சினைக் கதிர்பின் சென்று அரு மறையுணர்ந்தாய்
அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனை, அஞ்சேல் என்றருளும் வீரன் அனுமனே போற்றி போற்றி.

அஞ்சிலே ஒன்றால் பெற்று, அஞ்சிலே ஒன்றைத் தாவி, அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி,அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு, அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்த அனுமனே காத்திடுவாய்.

சஞ்சீவி மலை பெயர்த்து, மலையையே கரத்தில் ஏந்தி வந்து இளவல் லக்குமணன் உயிர் காத்த அனுமனே போற்றி.

அரக்கர் கூட்டம் அழித்து மகிழ்பவன், இராமனின் நாமம் கேட்டிடில் மெய்மறந்து துதிப்பவன், அனுமன் ஜெய் ஸ்ரீ ராம்.

அறிவு பலம், உடல் வலி, அச்சமிலா மனம், அஜாட்டியம், ஆளும் சொற்றிறம், அனுமனே தந்திடு எனக்கு
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்துவம் அரோகதா அஜாட்டியம் வாக்படுத்துவம் தேஹி மே அனுமந்தா.

இதனை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் மனனம் செய்து மனக்கவலை நீங்கி வாழ்வில் வெற்றி பெறவீராக.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00