ஆடிப்பெருக்கில் அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனை தரும் அற்புத மந்திரம்!

by ஆசிரியர்
Reading Mode

புண்ணிய நதி ஸ்தோத்திரம் என்பது புனித நதிகளை போற்றிப் பாடும் துதி பாடலாகும். இது பெரும்பாலும் இந்து மதத்தில், குறிப்பாக கங்கை நதியை போற்றிப் பாடப்படுகிறது. புண்ணிய நதிகளில் நீராடும் போது நதிக்குரிய துதிகளை பாடி நீராடினால் பாவங்களைப் போக்கி புண்ணியம் சேர்க்கும் என்பது நம்பிக்கை.

நதிஸ்தோத்ரம்:-

ப்ரவக்ஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாசனம்
பாகீரதி வாரணாஸி யமுநா ச ஸரஸ்வதீ பல்குநி சோணபத்ரா
ச நர்மதா கண்டகீ ததா கயாப்ரயாகே ஸரயூஸ் த்ரிவேணி மணிகர்ணிகா
க்ருஷ்ணவேணீ பீமரதி, கௌதமி பயநாசிநி அக நாசி வியத்கங்கா
துங்கபத்ரா பலாபஹா குண்டீ ஹைமவதீ சைவ வரதா ச குணுத்வதீ
வேத்ரவதீ வேதவதீ காயத்ரீ கோசிகீ ததா குந்தா மந்தாகிநீ சைவ க்ருதமாலா ஹர்த்ருதா மஞ்சரீ தபதீ காளீ ஸீதா சாலகநந்திநீ
ஸ்த்தாச்ரமச்ச ஸிம்ஹாத்ரீ புண்டரீக மதோத்பலம்
ஸ்வாமி புஷ்கரணீ சைவ ஸத்ய புஷ்கரணீ ததா
சந்த்ர புஷ்கரணீ சைவ ஹேமபுஷ்கரணீ ததா
கௌமேதகீ குருக்ஷேத்ரம் பதரீ த்வாரகா ததா

பொதுப்பொருள்:

பாகீரதி, வாரணாசி, யமுனை, சரஸ்வதி, பல்குநி, சோணபத்ரா, நர்மதை, கண்டகீ, கயா, ப்ரயாகை, சரயூ, திரிவேணி, மணிகர்ணிகா, க்ருஷ்ணவேணீ, பீமரதி, கௌதமி, வியத்கங்கா, துங்கபத்ரா, பலாபஹா, குண்டீ, ஹைமவதீ, வேத்ரவதீ, வேதவதீ, காயத்ரீ, கோசீகீ, மந்தாகிநீ, தபதீ, ஸ்வாமி புஷ்கரணீ, ஸத்ய புஷ்கரணீ, சந்த்ர புஷ்கரணீ, ஹேம புஷ்கரணீ, கௌமேதகீ, குருக்ஷேத்ரம், பதரீ, த்வாரகா ஆகிய எல்லா புண்ணிய நதிகளுக்கும் நமஸ்காரம்.என் பாவங்கள்,மன விகாரங்கள் முதலான அழுக்குகளை நீக்கி என்னைப் புனிதனாக்குவீர்களாக,நமஸ்காரம்.

ஆடிப்பெருக்கு தினமான ஆடி பதினெட்டாம் தேதியன்று எந்த நீர் நிலையிலாவது நீராடி, இத்துதியைப் பாராயணம் செய்தால்,மேலே குறிப்பிட்ட அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டும் என்பது திண்ணமாகும்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00